Automatic call Recorder
உங்கள் தொலைபேசி உரையாடல் களைத் தானாகவே பதிவு செய்கிறது Automatic call Recorder
எனும் எண்ட்ரொயிட்-எப். கையடக்கத் தொலை பேசி மூலம் எடுக்கப்பட்ட எல்லா அழைப்புகளையோ அல்லது தெரிவு செய்த அழைப்புக்களை மாத்திரமோ இதனூடு பதிவு செய்து பின்னர் கேட்க முடியும். பதிவு செய்யப்படும் அழைப்புக்களை MP3
வடிவிலோ அல்லது WAV
வடிவிலோ உங்கள் கையடக்கத் தொலைபேசி யிலேயே சேமித்துக் கொள்ளலாம். அல்லது கூகில்ட்ரைவ், ட்ரொப-பொக்ஸ் போன்ற இணைய சேமிப்பகங்களுக்கும்
அனுப்பி விடலாம்.
உங்களுக்கு வரும் முக்கிய அழைப்புக்களையோ அல்லது அனாமதேய (anonymous calls)
அழைப்புக்களையோ இலகுவகப் பதிவு செய்வதற்கு மிகச் சிறந்த அப்லிகேசன் இந்த Automatic call Recorder இதனை ப்லே ஸ்டோருக்குச் சென்றோ அல்லது படத்திலுள்ள QR கோடை ஒரு QR Scanner மூலம் ஸ்கேன் செய்தோ இலகுவாக நிறுவிக் கொள்ளலாம்.
அனூப்
Post Comment