How to draw a table using a keyboard

விசைப்பலகை முலம் அட்டவணை உருவாக்க..

எம்.எஸ்.வர்டில் அட்டவணையொன்றை ரிப்பனில் உள்ள கட்டளைகளை செயற்படுத்தி இலகுவாக உருவாக்கி விடலாம் என்பதை அநிந்திருப்பீர்கள். எனினும் விசைப்பலகை மூலம் அட்டவணையொன்றை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிவீர்கள?

ஒரு நிரை (row) மற்றும் மூன்று நிரல்களுடன் (column)  கூடிய ஒரு அட்டவணைய உருவாக்குவதற்கு முதலில் ஒரு புதிய வரியின் ஆரம்பத்தில் கர்சரை நிறுத்துங்கள். அடுத்து விசைப்பலகையில் ”+” (சக) குறியீட்டை நான்கு தடவை (plus, space, plus, space…) இடைவெளியுடன் டைப் செய்து எண்டர் விசையை அழுத்துங்கள். இப்போது ஒரு நிரை மற்றும் மூன்று நிரல்களுடன் கூடிய ஒரு அட்டவணை உருவாகியிருப்பதை  அவதானிக்கலாம். இந்த அட்டவணையில் நிரலின் அகலம் குறுகியதாகக் காணப்படும். எனினும் நீங்கள் அட்டவனையினுள்ளே டைப் செய்யும் போது சொல்லின் அளவுக்கேற்ப நிரல் அளவு அதிகரிக்கும். டேப் விசையை அழுத்தி அட்டவணையினுள்ளே கர்சரை நகர்த்துவதன் மூலம் மேலும் நிரைகளையும்  உருவாக்கலாம்.

அகன்ற நிரல்களுடன் கூடிய அட்டவணைய உருவாக்க வேண்டுமாயின் + குறியீட்டுக்குப் பதிலாக ”-” (dash) குறியீட்டைத் தேவையான அளவு அழுத்துங்கள்.


உங்கள் கணினியில் சில வேளை இந்தக் கட்டளை இயங்காதிருந்தால் கீழே குறிப்பிடுவதுபோல் எம்.எஸ்.வர்டில் செட்டிங்ஸ் மாற்றி விடுங்கள். ஒபிஸ் பட்டனில் (2007 பதிப்பு) அல்லது பைல் டேபில் (2010 பதிப்பு) க்ளிக் செய்து வரும் மெனுவில் Word Options அல்லது Options  தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Proofing தெரிவு செய்து அங்கு AutoCorrect options பட்டனில் க்ளிக் செய்யுங்கள்அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் AutoFormat As You Type எனும் டேபில் க்ளிக் செய்து Apply as you type  எனும் பகுதியில் Tables என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றி ஓகே சொல்லிவிடுங்கள் .-அனூப்-