What is Chromecast?

Gadgets

Chromecast என்றால் என்ன?

இணையத்தில் நீங்கள் பார்வையிடும் யூடியூப்  விடியோ மற்றும் இசைக் கோப்புக்களை  தொலைக்காட்சி வழியே பார்கும் வசதியை அளிக்கும் ஓரு சிறிய கருவியே ”க்ரோம் காஸ்ட்”. கூகில் நிறுவனத்தின் தயாரிப்பான க்ரோம் காஸ்ட் இணையத்தில் இணைய உதவும் ”டொங்கில்” போன்ற அமைப்பில் இருக்கும்.

இந்த க்ரோன்ம் காஸ்ட் கருவியைத் தொலைக் காட்சிப் பெட்டியிலுள்ள HDMI போர்டில் செருகி விட்டு எண்ட்ரொயிட் ஸ்மாட் போன் மற்றும் டேப்லட் பீசியை  வைபை ( )  இணைப்பின் மூலம்  இந்த க்ரோம் காஸ்ட் கருவியுடன் இணைக்க வேண்டும். மேலும் ப்லே ஸ்டோரிலிருந்து எண்ட்ரொயிட் கருவிக்கான க்ரோம்காஸ்ட் அப்லிகேசனையும் நிறுவிக் கொள்ள வேண்டும்.

கையடக்கக் கருவிகளில் அடிக்கடி வீடியோ காட்சிகளைப் பார்ப்பவர்களுக்கும், கையடக்கக் கருவியின் திரை சிறிதாக நிருப்பதால் அவற்றில் வீடியோ பார்க்க விரும்பாதவர்களுக்கும் தொலைக் காட்சிப் பெட்டியில் பெரிய அளவில் வீடியோக்களைப் பார்க்கும் வசதியை அளிக்கிறது க்ரோம் காஸ்ட்.

க்ரோம்காஸ்ட் மூலம் ஓன்லைன் விடியோக்கள் மட்டுமன்றி உங்கள் அண்ட்ரொயிட் கருவியின் திரையையும் ஒரு விம்பம் போல் தொலைக் காட்சிப்பெட்டியிலும் பார்க்கலாம். மேலும் எண்ட்ரொயிட் கருவியிலுள்ள் போட்டோக்கள், வீடியோ போன்றவற்றையும் பார்க்கும் வசதியை அழிக்கிறது  க்ரோம்

காஸ்ட். க்ரோம் காஸ்ட் கருவி e-bay தளத்தில் 30 டாலர் அளவில் கிடைக்கிறது.  -அனூப்-