WhatsApp introduces multi-device capability for beta users

 

WhatsApp introduces multi-device capability for beta users வாட்ஸ்அப் பல சாதன உள்நுழைவைப்  (multi-device login) அறிமுகப்படுத்தியிருக்கிறது.  பீட்டா (beta-சோதனை நிலை) நிலையில் இருக்கும்  இந்த அம்சம் இப்போது Android மற்றும் iOS இல் குறிப்பிட்ட சில பயனர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.   இதன்  மூலம் வாட்சப்பில்  ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் உள்நுழைய அனுமதிக்கிறது. மேலும் இதனைப் பயன் படுத்த உங்கள் தொலைபேசியுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டியதில்லை. உலகளவில் இந்த அம்சம் இப்போது பீட்டா பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

WhatsApp introduces multi-device capability for beta users

இந்தப் பல சாதன வசதி வழமையான வாட்சப் பயன்பாட்டின் அதே அளவிலான பாதுகாப்பை உறுதிசெய்வதோடு  முனைக்கு முனை மறை குறியாக்கமும் நான்கு சாதங்களிலும் கிடைக்கும்.  வாட்சப் மல்டி-டிவைஸ் வசதியை எவ்வாறு பயன் படுத்துவது என்பதைப் கீளுள்ள படங்களிலிருந்து ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

வாட்சப் பல சாதன உள்நுழைவை செயல்படுத்துவதில் சில வரம்புகளும் உள்ளன. அவற்றுள் இந்த அம்சத்தை ஒரு தொலைபேசிக்கென   மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொலைபேசிகளில் உங்கள் வாட்சப் கணக்கைப் பயன்படுத்த வழி இல்லை.

வழமையாக வாட்சப் பயன் படுத்தும் உங்கள் தொலைபேசியுடன் டெஸ்க்டாப் கம்பியூட்டர், டேப்லட் பிசி , லெப்டாப் போன்ற  புதிய சாதனங்களை இணைத்துக் கொள்ள முடியும்.   இது  ஏற்கனவே பயன் பாட்டிலுள்ள வாட்சப் வெப் மற்றும் வாட்சப் டெஸ்க்டாப் பதிப்பு  போன்றதுதான். எனினும்  முன்னர் போல் அல்லாமல் வாட்சப் பயன் படுத்த பிரதான கணக்குக்குரிய தொலைபேசியுடன் தொடர்பைப் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.

எனினும் பிரசாதனங்களில் வாட்சப் பயன் படுத்த ஆரம்பித்து  அவற்றிற்குரிய தொலைபேசியில் வாட்ஸ்அப்பை 14 நாட்களுக்கு மேல் பயன்படுத்தாவிட்டால், நீங்கள் உள்நுழைந்த சாதனங்கள் அனைத்தும் இணைப்பிலிருந்து (unlink)  நீக்கப்படும்.