Android phones will soon store your COVID vaccination card
Android phones will soon store your COVID vaccination card கோவிட் COVID-19 வைரஸிற்கெதிரான முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் தங்கள் தடுப்பூசி நிலையை நிரூபிக்க காகித அட்டையிலான சான்றிதழை இனி கையோடு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.
அண்ட்ராய்டு பயனர்கள் COVID-19 தடுப்பூசி அட்டைகளை தங்கள் தொலைபேசிகளில் சேமிக்க கூகுல் இப்போது அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் COVID-19 தடுப்பூசி அட்டை, COVID- சோதனை முடிவுகளை சேமிப்பதற்கான பாதுகாப்பான வழியை செயற்படுத்த கூகுலின் Passes API (Application Programming Interface) எனும் அம்சத்தை ஐ புதுப்பித்துள்ளது. இந்த வசதி ஆரம்பத்தில் அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்காக மட்டும் வெளியிடப்படும். பின்னர் அது மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
அண்ட்ராய்டு சாதனங்களில் COVID தடுப்பூசி மற்றும் சோதனை அட்டைகளை சேமித்து அணுகுவதற்கான எளிய மற்றும் பாதுகாப்பான வழியை செயறபடுத்த கூகுல் அதன் API ஐ புதுப்பித்துள்ளது. எனவே COVID தடுப்பூசிகள் மற்றும் / அல்லது சோதனைகளை விநியோகிக்க பொது சுகாதார அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் டெவலப்பர்கள் (செய் நிரலாக்கர்) COVID தடுப்பூசி அல்லது சோதனை தகவலின் (test reports) டிஜிட்டல் பதிப்பை உருவாக்க இந்த API களை அணுகலாம்.
ஒரு பயனர் தனது COVID வெக்ஸீன் தொடர்பான அட்டைகளை தனது சாதனத்தில் சேமித்து வைத்தால், அதை அவர்களின் சாதன முகப்புத் திரையில் சார்ட்கட் (shortcut) வழியாக அணுக முடியும் என்று கூகுல் கூறுகிறது. பயனர்கள் தங்கள் COVID தடுப்பூசி அட்டையை அணுக இணைய இணைப்பு தேவையில்லை என்பது கூடுதல் வசதி. இந்த செயலியை நிறுவ உங்கள் Android சாதனம் Android 5 அல்லது அதற்குப் பிந்திய பதிப்பாக இருக்க வேண்டும் மற்றும் Play Protect சான்றளிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
பயனரின் கோவிட் கார்டில் உள்ள தகவல்களைக் கூகுல் அதன் மூன்றாம் தரப்பு சேவைகளுடனும் விளம்பரதாரர்களுடனும் பகிரமாட்டாது என கூகுல் உறுதியளித்துள்ளது. பயனர் மட்டுமே தனது அட்டையை அவர்கள் விரும்பும் சேவைகளுக்குக் காட்ட முடியும். Google ற்கு அங்கு எந்தப் பங்கும் இல்லை. கூகுல் உங்கள் சாதனத்தில் தடுப்பூசி அட்டையைச் சேமிக்க மட்டுமே உதவும்.
பல சாதனங்களில் உங்கள் COVID தொடர்பான அட்டைகளை அணுக விரும்பினால், அதை ஒவ்வொரு சாதனத்திலும் கைமுறையாக (manually) சேமிக்க வேண்டும். பயனரின் கோவிட் தடுப்பூசி அல்லது சோதனைத் தகவலின் நகலைத் (copy) தாங்கள் சேமிப்பதில்லை என கூகுல் கூறுகிறது.
ஒரு சாதனத்தில் COVID அட்டையை சேமிக்க பயனர்கள் திரையைப் பூட்டிட (lock screen) வேண்டும். இது பயனரின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்கான கூடுதல் ஏற்பாடு எனக் கூகுல் கூறுகிறது. ஒரு பயனர் தங்கள் COVID அட்டையை அணுக விரும்பினால், அவர்களது Android சாதனத்திற்காக அமைக்கப்பட்ட கடவுச்சொல், பின் இலக்கம் (PIN), அல்லது பயோமெட்ரிக் முறையை (biometric method) வினவும்.