WhatsApp will allow you to join group calls after they start
WhatsApp will allow you to join group calls குழு அழைப்புகள் தொடங்கிய பின்னரும் உரையாடலில் சேர வாட்சப் இனி அனுமதிக்கும்
வாட்சப் அடுத்த வாரம் புதிய சேரக்கூடிய அழைப்பு (joinable calls) எனும் அம்சத்தை வெளியிடுகிறது. இது குழு அழைப்புகள் (group calls) தொடங்கியபின்னரும் உங்களுக்கு வசதியான நேரத்தில் இணைய முடியும். வாட்சப் பயனர்களுக்கு இது இது ஒரு பயனுள்ள அம்சமாக அமையப் போகிறது.
அதாவது குரூப் கால் ஆரம்பிக்கும் போதே அல்லாமல் இடையிலேயே உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அழைப்பில் சேர முடியும். இது ஷூம் மீட்டிங் மற்றும் கூகுள் மீட்டில் இணைவதைப் போன்று இருக்கும். குரூப்பில் குரல் அழைப்பு, வீடியோ அழைப்பு இரண்டையும் இது ஆதரிக்கும். ஆனால் ஒரே நேரத்தில் மொத்தம் எட்டுப் பேரையே இணைக்க முடியும்.
குரூப் கால் அழைப்பில் சேர ஜாயின் ( join )பட்டனைத் தட்ட வேண்டும். குருப் காலில் இருக்கும் போது ஒரு தகவல் திரையையும் info screen காண்பிக்கும். இதன் மூலம் தற்போது அழைப்பில் யார் இருக்கிறார்கள், இதுவரை யார் இணையவில்லை போன்ற விவரங்களையும் காண்பிக்கும். சேரக்கூடிய அழைப்புகள் (joinable calls) முனைக்கு முனை (end-to-end encrypted) வழமை போன்றே மறை குறியாக்கம் செய்யப்படும்.
சேரக்கூடிய (joinable calls) அழைப்புகள் எனும் புதிய அம்சத்தை அடுத்த வாரம் ஆரம்பிக்கவிருக்கிறது வாட்சப்.