Windows 365, a cloud-based OS to be released next month

 

Windows 365, a cloud-based OS to be released next month உங்கள் கம்பியூட்டரில்  விண்டோஸை  நிறுவாமலே  விண்டோஸைப் பயன் படுத்தும்  வசதியை மைக்ரோஸாப்ட் அறிமுகப்படுத்துகிறது.

விண்டோஸ் 365 எனும் இந்த சேவையை கம்பியூட்டர் பிரவுசரிலிருந்தே அணுக முடியும். அதாவது ஆப்பிலின் மேக்-Mac, ஐ-பேட்-iPad, கூகுலின் Chromebook, Android தொலைபேசிகள் மற்றும் லினக்ஸ் நிறுவிய கம்பியூட்டர்கள் உள்ளிட்ட விண்டோஸ் அல்லாத  எந்த சாதனத்திலிருந்தும் அணுகக்கூடிய கிளவுட் (cloud based) அடிப்படையிலான  சேவையே Windows 365.  இந்த சேவையை  ஆகஸ்ட் 2, 2021 ஆரம்பிக்கிறது மைரோசாப்ட்.  

விண்டோஸ் 365 “கிளவுட் பிசி” ஐப் பயன்படுத்த, நவீன வலை உலாவி (web browser) கொண்ட ஏதோ ஒரு சாதனமும் இணைய இணைப்புமே  அவசியம். விண்டோஸ் 365 சேவையைப் பயன் படுத்தி விட்டு இணைப்பைத் துண்டிக்கும் போது கூட கிலவுட் சேர்வரில் உள்ள உங்கள் விண்டோஸ் டெஸ்க்டாப் அதன் தற்போதைய நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும்.

Windows 365, a cloud-based OS to be released next month

உதாரணமாக  ஒரு எக்சல் விரிதாளில் பணியாற்றி விட்டு, மேக் கம்பியூட்டரிலிருந்து ஐபேடிற்கு மாறினாலும், மீண்டும் இணைக்கும்போது முன்னர் எக்சலில்  விட்டுச் சென்ற இடத்தைப் பார்க்க முடிவதோடு   உங்கள் பணியைத் தொடர்ந்து செய்யவும் முடியும்.  இது வழமையான விண்டோஸ் டெஸ்க்டாப்பில் sleep mode பயன்முறையிலிருந்து கணினியை மறுபடி இயக்குவதைப்  போன்ற செயலாகும்.

உங்கள் கம்பியூட்டரில்  விண்டோஸ் இல்லாமலேயே விண்டோஸில் இயங்கும் பயன்பாடுகளை (applications) இயக்கக் கூடிய வசதியானது விண்டோஸ் 365 இல் கிடைக்கும் முக்கிய அனுகூலமாகக் கருதப்படுகிறது. அதாவது விண்டோஸ் அல்லாத வேறு கணினிகளில் உங்களிடம் இணைய இணைப்பு இருக்கும் வரை முழுமையான  விண்டோஸ் 10 டெஸ்க்டாப் பதிப்பை அணுகலாம். (விண்டோஸ் 11 பதிப்பு வெளிவர ஆரம்பித்தும் விண்டோஸ் 1 1 ஐயும் அதே வழியில் அணுக முடியும்)

ஆரம்பத்தில், விண்டோஸ் 365 சேவை  வணிக நிறுவனங்களுக்கு மாத்திரமே கிடைக்கும். பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் தனி  நபர் வணிகங்களும் இந்த சேவைப் பெறத்  தகுதியானவை.

வணிக நிறுவனங்கள் Windows 365 கிளவுட் பிசிக்களை எளிதில் நிர்வகிக்கவும் அணுகலைக் கட்டுப்படுத்தவும் முடியும். மேலும் இது ஒரு மாதாந்திர சந்தா (monthly subscription) செலவைக் கொண்டிருக்கும். மைக்ரோசாப்டின் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையான Microsoft Azure  அஸூரில் ஹோஸ்ட் செய்யப்பட்டிருக்கும் இதனை  பல்வேறு வன்பொருள் உள்ளமைவுகளுக்கேற்ப  பல்வேறு விலைகளில் மைக்ரோசாப்ட் வழங்கவிருக்கிறது.

விண்டோஸ் Windows 365 சேவையை  மைக்ரோசாப்ட்  365 சேவையுடன் ஒப்பிட்டு யாரும் குழம்பி விடக்  கூடாது. Microsoft  Microsoft 365 என்பது ஏற்கனவே இருந்து மைக்ரோசாப்டின் Office 365 கிலவுட் சேவையின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இதனையே Microsoft 365 என பெயர் மாறறம் செய்யப்பட்டுள்ளது.