Google Workspace now for everyone கூகுல் பணியிடம் தற்போது அனைவருக்கும்
Google Workspace now for everyone முன்னர் ஜி சூட்-G Suite என்று அழைக்கப்பட்ட வணிக நிறுவங்களுக்கான Google Workspace (கூகுல் பணியிடம்) என்பது வினைத்திறன் வாய்ந்த (productivity tools) கருவிகளின் தொகுப்பாகும். அதாவது ஜிமெயில், கூகுல்டாக்ஸ், கூகுல்மீட் மற்றும் பிற கருவிகளை ஒருங்கிணைக்கும் பணியிடமே கூகுல் வர்க்-ஸ்பேஸ். சமீபத்தில் இந்த கருவிகளின் தொகுப்பை அனைவருக்கும் கிடைக்குமாறு கூகுல் முடிவு செய்துள்ளது.
Google Workspace இப்போது முன்பு இருந்ததைப் போலவே நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது கூகுல் கணக்கைக் கொண்ட அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது. இது ஜி சூட்டிற்குப் (G Suite) பதிலானதும் மற்றும் அதனையும் ஒருங்கிணைக்கும் கருவிகளின் தொகுப்பாகும்.
இது வணிக தொடர்பு, கூட்டு வேலை மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் நிறுவன ஊழியர்கள் மற்றவர்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்தாலும் ஒரு குழுவில் உள்ள ஆவணங்களை அணுகலாம் அவற்றில் பணியாற்றலாம். இது அரட்டை-chat, மின்னஞ்சல்-email, குரல்-voice, வீடியோ அழைப்புகள்-video calls, உள்ளடக்க மேலாண்மை-content management மற்றும் organization-அமைப்பு போன்ற தொடர் கருவிகளைக் கொண்டுள்ளது.
மேலும் Google Workspace-கூகுல் பணியிடத்திற்குள் ஜிமெயில், கூகுல் டாக்ஸ் மற்றும் கூகுல் டிரைவின் அனைத்து அலுவலக ஆட்டோமேஷன் பயன்பாடுகள் (டிரைவ் உட்பட), கூகுல் கிளவுட் தேடல்-Cloudsearch, கூகுல் காலண்டர்-Calendar, கூகுல் சந்திப்பு-Meet மற்றும் அரட்டை-Chat, தளங்கள்-Sites, கூகுல் கீப்-Keep, ஜம்போர்டு-Jamboard, ஆப்ஸ் ஸ்கிரிப்ட்-Apps Script, கூகிள் வால்ட்-Vault மற்றும் இணைப்பு புள்ளி-Connection Point, ஒரு நிறுவனத்தின் பகுதியாக இருக்கும் அனைத்து சாதனங்களையும் நிர்வகிக்கக்கூடியதாக இருக்கும்.
அனைத்து கூகுல் கணக்கு பயனர்களுக்கும் இலவச கூகுல் பணியிடத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நிறுவனம் அதன் பயன்பாடுகளுக்கு பின்வரும் புதுப்பிப்புகளை அறிவித்துள்ளது, அவற்றில் சில ஏற்கனவே செயல்படுகின்றன
இணைப்புகளின் முன்னோட்டம் Preview of links
கூகுல் Docs-டாக்ஸ்ஸில் பணிபுரியும் போது, பயனர்கள் இணைப்பைக் கொண்ட உள்ளடக்கத்தை திறந்து பார்க்காமலே முன்னோட்டமிட முடியும். எடுத்துக்காட்டாக, கூகுல் விரிதாள் இணைப்பின் மூலம், அதில் என்ன இருக்கிறது என்பதை திறந்து பார்க்காமலே காண முடியும்.
ஸ்மார்ட் சிப்ஸ் Smart Chips
ஒரு கூட்டு ஆவணத்தில் collaborative document பணிபுரியும் போது குழு பயனர்களில் ஒருவரைக் குறிப்பிடுவதற்காக ஒரு contextual menu (சூழல் மெனு) ஆவணத்தைப் பகிர்தல் போன்ற பரிந்துரைக்கப்பட்ட செயல்களுடன் தோன்றும்.
Google மீட்டில் PiP பயன்முறை (Picture in Picture) mode
அடிப்படையில், டாக்ஸ்-Docs, தாள்கள்-Sheets மற்றும் Slides-ஸ்லைடுகளில்-ஒரு ஆவணத்தில் பணியாற்றும் அனைத்து நபர்களுடனும் வீடியோ அழைப்பைத் தொடங்க இது உங்களை அனுமதிக்கிறது. இதற்கு கூகுல் Meet பயன் பாட்டைத் திறக்காமல், ஆவணத்திற்குள்ளேயே pop-up விண்டோ மூலம் அழைப்பை மேற்கொள்ளலாம்.
அரட்டை அறைகளில் (chat- rooms) ஆவணங்களை உருவாக்குதல்
இந்த புதுப்பிப்பு இன்னும் யாருக்கும் கிடைக்கவில்லை. வரும் வாரங்களில் வருவதாக கூகுல் அறிவித்துள்ளது. இது ஒரு அரட்டை அறையிலிருந்து நேரடியாக பகிரப்பட்ட ஆவணத்தை உருவாக்க அனுமதிக்கும். குறிப்புகளை எடுக்க புதிய டேபைத் திறக்க வேண்டிய அவசியமில்லை. அதனை அரட்டையிலிருந்தே அணுகலாம்.