Clip feature has arrived on YouTube
இனிமேல் யூடியூப் விடியோவின் குறித்த பகுதியை மட்டும் நண்பரைப் பார்க்க வைக்க நேரக் குறியீட்டைக் கொடுக்கவோ அல்லது எப்போது பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று சொல்லவோ தேவையில்லை. யூடியூப் வீடியோவின் ஒரு குறிப்பிட்ட சிறு பகுதியை மட்டும் பகிரக் கூடிய கிளிப் “Clips” எனும் அம்சம் இப்போது யூடியூபில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிப் என்பது ஒரு YouTube வீடியோவின் சிறு பகுதியைக் குறிக்கிறது. இந்த கிளிப் ஐந்து முதல் 60 வினாடிகள் வரை எங்கும் இருக்கும். நீங்கள் உருவாக்கும் அனைத்து கிளிப்களும் library பகுதியில் சேமிக்கப்படும். அதனை விரும்பிய நேரத்தில் பிறருடன் சமூக ஊடகங்கள் வழியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ எளிதாகப் பகிர முடியும்.
YouTube’s new Clips feature allows users to share 60second video clips நீங்கள் பகிர்ந்த கிளிப்பை யாராவது பார்க்கும்போது, மீண்டும் மீண்டும் அப்பகுதி இயங்கும். அவர்கள் அதனை வேறொருவருக்கு அனுப்பவும் முடியும் அல்லது கிளிப்பை விட்டுவிட்டு நீங்கி அசல் வீடியோவுக்கும் சென்று முழு வீடியோவையும் தடையின்றிப் பார்க்கவும் முடியும்.
யூடியூப் கிளிப் அம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான யூடியூப் சேனல்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, அதிலும் கேமிங் சேனல்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீடியோ படைப்பாளர்கள் தங்கள் வீடியோக்களில் இந்த அம்சத்தை இயக்க வேண்டும். அதாவது எல்லா வீடியோவையும் கிளிப் செய்ய முடியாது.
யூடியூப் கிளிப் அம்சத்தை டெஸ்க்டாப் பிரவுஸர் மற்றும் Android சாதனங்களில் மட்டுமே தற்போது காணலாம். கிளிப்பை உருவாக்கும் வசதி iOS சாதனத்திற்கு இதுவரை வழங்கப்பட வில்லை.
கம்பியூட்டரில் YouTube கிளிப்பை உருவாக்கி அதைப் பகிர்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் கானலாம்.