Better History
கூகில் க்ரோம் இணைய உலாவியில் history பக்கத்திற்குச் செல்வதன் மூலம் இணையத்தில் நீங்கள் பார்வையிடும் தளங்கள் அனைத்தையும் காணலாம்.
பிரவுசரோடு இனைந்து வரும் இந்த ஹிஸ்டரி
கருவி எங்கள் இணைய பயன் பாட்டை திகதி வாரியாகப் பட்டியலிட்டாலும் ஒரு குறிப்பிட்ட திகதிக்குரிய
இணைய பயன் பாட்டை அறிய சற்று சிரமப் பட வேண்டியிருக்கும். எனினும் இதனைவிட மேம்பட்டதாக
மிக நேர்த்தியாக எமது இணைய செயற்பாடுகளைப் பதிவு செய்து திகதி வாரியாக வடிகட்டி அழகிய
இடை முகப்புடன் காண்பிக்கிறது Better History எனும்
க்ரோம் எக்ஸ்டென்சன். இதன் மூலம் வெவ்வேறு திகதி மற்றும் நேரங்களில் எமது இணைய செயற்பாடுகளை
மிக வேகமாக அறியலாம்.
மேலும் உங்கள் இணைய செயற்பாடுகளை இனைய தளத்தின் பெயர்
மற்றும் இணைய முகவரிகளைப் பயன் படுத்தியும் இலகுவாகத் தேடலாம். இவ்வாறு பல்வேறு வசதிகளைத்
தரும் இந்த எக்ஸ்டென்ஸன் அவசியம் பிரவுசரில் இருக்க வேண்டிய ஒரு என்ஸ்டென்ஸன் எனலாம்.
மேலும் இந்த எக்ஸ்டென்ஸன் க்ரோம் பிரவுசருக்கு மட்டுமன்றி பயபொக்ஸ் போன்ற வேறு பிரவுசர்களுக்காகவும்
கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Post Comment