How to find the lost Android Device?

தொலைத்த எண்ட்ரொயிட் கருவியைக் கண்டுபிடிக்க

உங்கள் கையடக்கத் தொலைபேசியை ஓசை எழுப்பாத நிலைக்கு மாற்றி  (silent mode) ல் எதிர்பாராதவிதமாக  அதனை எங்கோ மறந்து வைத்து விட்டு, வைத்த இடம் தெரியாமல் தொலைபேசியை வீடு பூராகவும் தேடிய அனுபவம் உங்களுக்கிருக்கலாம். தொலைபேசி சைலண்ட் மோடில் இருந்தால் வேறொரு தொலைபேசிமூலமாக அழைப்பு எடுத்து டயல் செய்தாலும்  ரிங் பண்னும் ஒலியைக் கொண்டு கண்டு பிடிக்க முடியாது. ஏனெனில் சைலண்ட் மோடில் தொலைபேசி ஓசையே எழுப்பாது. ஆனால் இந்த விதி தற்காலத்து ஸ்மாட் போன்களுக்குப் பொருந்தாது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் தொலைபேசி சைலண்ட் மோடில் இருந்தாலும் எண்ட்ரொயிட் கருவிகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது கூகில் நிறுவனம். உங்கள் என்ரொயிட் கருவியை வைத்த இடம் மறந்து விட்டால் .அல்லது காணாமல் போனால் கூகில் தளத்தின் மூலம் கண்டு பிடிக்கவோ அல்லது தொலைபேசியிலுள்ள அந்தரங்கமான தகவல்கள் பிறர் கையில் கிடைத்துவிடாமல் அவற்றை அழித்து விடவோ முடியும்.


அதற்குப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். பிரவுசரைத் திறந்து நேரடியாக கூகில் தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு Find my phone  என டைப் செய்து Search பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது காண்பிக்கப்படும்  தேடல் முடிவு பக்கத்தில் Find my phone   பகுதியில் உங்கள் கூகில் கணக்குக்குரிய பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்ட் விவரங்களை வழங்கி லொக் இன் செய்து பிறகு உங்கள் தொலைபேசி இருக்கும் இடத்தை GPS வசதியுடன் தேட ஆரம்பிக்கும். அதன் கீழ் ‘ரிங்’ எனும் பட்டனில் க்ளிக் செய்ய தொலைபேசி சைலண்ட் மோடில் இருந்தாலும் தொலைபேசி பகத்தில் எங்காவது இருந்தால் ரிங் ஆகும் ஒலியைக் கேட்கலாம்.