What is Green PC?

 பசுமைக் கணினி

infotechgreen

 

கணினி மற்றும் கணினி தொடர்பான சாதனங்களை சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல்.  உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, அழிக்கப்படுதலை பசுமைக் கணினி (Green Computing)  எனப்படுகிறது.  பசுமைக் கணினி திட்டத்திற்கு நீங்கள் எவ்வாறு உதவலாம்?

  • கணினி மற்றும் துணைக்கருவிகளை பயன் படுத்தாத நேரங்களில் மின் இணைப்பைத் துண்டியுங்கள்
  • கணினித் திரையைப் பயன் படுத்தாத நிலையிலும் ; ஸ்க்ரீன் சேவரை இயக்காமல் மின் இணைப்பைத் துண்டியுங்கள்.
  • CRT வகை கணினித் திரைப் பாவனையின் போது இருள் வண்ணப் பின்னணி கொண்ட படங்களைப் பயன் படுத்துங்கள் ஏனெனில் பிரகாசமான நிறங்களைக் கொண்ட பின்னணி படங்கள் அதிக மின் சக்தியை நுகரும். எனினும் டுஊனு திரை இதற்கு நேர் மாறானது.
  • கணினியிலுள்ள வலு முகாமை (power management) வசதியைப் பயன் படுத்துங்கள்.
  • அச்சுப் பொறிகளை வலையமைப்பினூடாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • மிக அவசியமான ஆவணங்களை மட்டும் அச்சிடுங்கள்.
  • கடிதம், தொலை நகலுக்குப் பதிலாக மின்னஞ்சலைப் பயன் படுத்துங்கள்
  • அச்சிடும் போது முடிந்தளவு காகிதத்தின் இரண்டு பக்கங்களையும் பயன் படுத்துங்கள்.
  • பழைய கணினி மற்றும் துணைச் சாதனங்களை மீள் சுழற்சிக்கு உட்படுத்துங்கள்.
  • டெஸ்க்டொப் கணினிகளுக்குப் பதிலாக மடிக் கணினிகளைப் பயன் படுத்துங்கள்.
  • கணினித் திரையின் பிரகாசத்தை முடிந்தளவு குறையுங்கள். அதிக பிரகாசம்; : அதிக மின்நுகர்ச்சி