எம்.எஸ்.எக்ஸலில் A முதல் Z வரை நிரப்புவதற்கு


எம்.எஸ்.எக்ஸலில் உள்ள fill handle  என்பது உபயோகமான ஒரு கருவி. இதன் மூலம் தொடரிலக்கம் கொண்ட ஒரு பட்டியலை மிக சுலபமாக உருவாக்கிவிட முடியும். உதாரணமாக 1,2,3,4 என 100 வரையிலோ 2,4,6,8.. என 150 வரையிலோ ஒவ்வொரு கலத்திலும்  டைப் செய்ய வேண்டியிருந்தால் முதல் இரண்டு கலங்களில் மாத்திரம் இலக்கங்களை டைப் செய்து விட்டு fill handle  பயன்படுத்தி தேவையான இலக்கம் வரை நிரப்பிக் கொள்ள முடியும்.

இவ்வசதி இக்லக்கங்களுக்கு மாத்திரமன்றி திகதி, நாள் மற்றும் மாதங்களுக்கும் பயன்படுத்தலாம்.  ஆனால்  ஆங்கில அரிச்சுவடியிலுள்ள (English alphabet)  எழுத்துக்களை (A-Z)  இவ்வாறு நிரப்பிக் கொள்ளும் வசதியை எம்.எஸ்.எக்ஸலில் ஏதோ காரனத்தில் தரப்படவில்லை.  எனினும் சில உபாயங்களைப் பயன் படுத்தி ஆங்கில எழுத்துக்களயும் நிரப்பிக் கொள்ள முடியும்.

ஒரு custom list ஐ தயார் செய்து கொள்வதன் மூலமோ அல்லது அதற்கென ஒரு சூத்திரத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலமோ ஆங்கில அரிச்சுவடியையும் இலகுவாகப் பெறலாம்..

ஒரு custom list ஐ உருவாக்கப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.  முதலில் A B C D என Z வரை  செல் A1 முதல்  A26  வரை டைப் செய்து அந்த வீச்சை தெரிவு செய்யுங்கள். அடுத்து File  டேபில் க்ளிக் செய்து Options தெரிவு செய்யுங்கள். தோன்றும் Excel options டயலொக் பொக்ஸில் Advanced பட்டனில் க்ளிக் செய்யுங்கள். (எம்.எஸ்.எக்ஸல் 2007 பதிப்பில் Popular பிந்திய பதிப்புகளில் Advanced) அங்கு சற்று ஸ்க்ரோல் செய்து கீழே வரும் போது Edit custom list பட்டனைக் காணலாம். அந்த பட்டனில் க்ளிக் செய்து வரும் டயலொக் பொக்ஸில் Import பட்டணில் க்ளிக் செய்யும் போது custom list பகுதியில் A முதல் Z வரை தோன்றக் காணலாம். அடுத்து  OK  செய்து வெளியேறி விடுங்கள்.

இப்போது விரிதாளில் எந்த கலத்தில் A என டைப் செய்து Fill handle  மூலம் இழுத்தாலும் Z வரை நிரம்புவதைக் காணலாம்.
ஆங்கில அரிச்சுவடியை சூத்திரத்தின் மூலம் பெற பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

கலம் A1 இல் 65 ஐயும் A2 இல் 66 ஐயும் டைப் செய்யுங்கள். பின்னர் fill handle   பயன் படுத்தி கலம் A26 வரை தொடர்ச்சியாக நிரப்பிக் கொள்ளுங்கள். இப்போது கலம் A26 இலக்கம் 90 ஐக் காண்பிக்கும். அடுத்து கலம் B1 இல் =CHAR(A1) எனும் சூத்திரத்தை டைப் செய்து அதனை B26 வரை நிரப்புங்கள். இப்போது A B C  D என ஆங்கில பெரிய எழுத்தில் (Capital letters)  நிரம்புவதைக் காணலாம். இதேபோல் ஆங்கில் சிறிய எழுத்தில் பெற (simple letters) 97 முதல் 122 வரை டைப் செய்து மேற் சொன்ன வழியில்  நிரப்பலாம்.