உங்கள் பேஸ்புக் பக்கம் உங்கள்  நண்பருக்கு எவ்வாறு தோன்றும்?



உங்கள் பேஸ்புக் பக்கத்தைப் பார்வையிடும் எவரும் நீங்கள் யார், உங்கள் கல்வித் தகைமை என்ன,  உங்கள் விருப்பு வெறுப்புக்கள் என்ன, உங்கள் நண்பர்கள் யார், போன்ற பல விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.

நீங்கள் பதிவிடும் விடயங்கள்  பகிரங்கமானவை (Public)  என அனுமதி வழங்கி விட்டால் உங்களை தனிப்பட்ட முறையில் அறியாதவர்கூட அவற்றைப் பார்வையிட முடியும்.
உங்கள் பதிவுகளைப் பகிரங்கப் படுத்துவதனால்   சில வேளைகளில் உங்களுக்கு சில சங்கடங்களையும் ஏற்படுத்தக் கூடும். அதனால் அவற்றைத் தவிர்ப்பதற்கு சில முன்னேற்பாடுகளையும் privacy serttings மூலம் செய்து கொள்ள முடியும்.

எனினும் இந்த privacy serttings இல் செய்யப்படும் மாற்றங்கள் முறையாக இயங்குகிறதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்வதற்கான வசதியையும் பேஸ்புக் தருகிறது. இந்த வசதியின் மூலம் உங்கள் பேஸ்புக் பக்கம்  உங்கள் நண்பருக்கு  எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதைக் காண்பிக்கும்.
எவ்வாறு  முன்னெச்சரிக்கையோடு பேஸ்புக் பயன்படுத்தும் போது எமது தனிப்பட்ட அந்தரங்க விடயங்கள் பகிரங்கமாவதிலிருந்தும்  தவிர்ந்து கொள்ள முடியும்.

உங்கள் பேஸ்புக் பக்கம்  உங்கள் நண்பருக்கு  எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்..

முதலில் பேஸ்கணக்கில் நுழைந்து  அட்டைப்படத்தின் (cover photo)    கீழ் பகுதியில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனில் க்ளிக் செய்யுங்கள். தோன்றும் சிறிய மெனுவில். View as என்பதைத் தெரிவு செய்யுங்கள்.  அப்போது உங்கள் நட்புப் பட்டியலில் இல்லாத ஒருவருக்கு உங்கள் பேஸ்புக் பக்கம் எவ்வாறு தோன்றும் என்பதைக் காணலாம்.

அதேபோன்று View as specific person எனும் லிங்கில் கிளிக் செய்ய வரும் பெட்டியில் உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருக்கும் நண்பர் ஒருவரின்  பெயரை டைப்  செய்வதன் மூலம் அந்த நண்பர் உங்கள் பேஸ்புக் பக்கத்தை எவ்வாறு காண்பார் என்பதையும் உறுதி செய்து கொள்ளலாம்.

சில குறிப்பிட்ட நண்பர்களுக்கு உங்கள் பதிவுகளைக் காண்பிக்க விரும்பா விட்டால் இந்த வசதி மூலம் அதனை உறுதி செய்து கொள்ள முடியும். எனினும் ஒரு பதிவை இடும் போது அப்பதிவை யாரிலிருந்து மறைக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே தெரிவு செய்து கொள்ள வேண்டும்.