கணினி Sleep Mode ற்குச் செல்வதைத் தடுப்பது எப்படி?


விண்டோஸ் கணினியில்  குறிப்பிட்ட  நேரம்  எந்த இயக்கமும் இல்லாமல் இருந்தால்   இயல்பாக ஸ்லீப் உறங்கு நிலைக்குச் (Sleep Mode)  செல்லுமாறு செட்டிங் செய்யப்பட்டுளது. கணினியில் ஏதாவது செயலிகள் செயற்பாட்டில் இருக்கும் போதும் கூட (மீடியா ப்லேயர் தவிர்த்து)  இவ்வாறு நிகழலாம்.


அடிக்கடி உங்கள் கணினி ஸ்லிப் மோடிற்குச் செல்லுமாயின் power options மூலம் அதனை மாற்றி அமைக்க முடியும்.
அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்
முதலில் கண்ட்ரோல் பேணல் சென்று அங்கு Power options தெரிவு செய்யுங்கள். தோன்றும் விண்டோவில் இடப்புறம் உள்ள  Change when the computer sleeps என்பதில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Put the computer to sleep எனுமிடத்தில் Never தெரிவு செய்து  Save பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.