கணினியை பென்ட்ரைவ் மூலம் லொக் செய்வதற்கு..

கணினியை அனுமதியின்றி எவரும் பயன் படுத்தாமல் இருக்கவிண்டோஸ் இயங்கு தளத்தில் கடவுச் சொற்கள்  வழங்கிப்பலரும் பயன் படுத்துவதுண்டு. எனினும் அந்தக் கடவுச்சொல்லை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டியதுஅவசியம். மாறாக  Rohos Logon Key  எனும் சிறிய மென்பொருள்பாஸ்வர்டுக்குப் பதிலாக உங்கள் பென் ட்ரைவையேபாஸ்வர்டாக பயன் படுத்தக் கூடிய  வசதியைத் தருகிறது.

இந்த மென்பொருளை rohos.com  எனும் இனையதளத்திலிருந்து டவுன் லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள்பென் ட்ரைவை கணினியில் செருகி மென்பொருளை  இயக்குங்கள். அதனை இயக்கியதும் தோன்றும் சிறிய விண்டோவில் Setup USB Key  என்பதைத் தெரிவு செய்துகொள்ளுங்கள்.

அப்போது தோன்றும் சிறிய பெட்டியில் உங்கள்  பென் ட்ரைவுக்குரிய  எழுத்தைத் தெரிவு செய்து உங்கள் பயனர் கணக்குக்குரிய  விண்டோஸ் பாஸ்வர்டை வழங்கி  Setup USB Key  என்பதைக் க்ளிக் செய்யுங்கள்.

இப்போது பென்ட்ரைவைக் கணினியிலிருந்து அகற்றி மறுபடிகணினியை இயக்குங்கள்.

இப்போது கணினி இயங்கஅரம்பித்ததும் லொக் ஓன் திரையுடன்நின்று விடும். அப்போதுபென்ட்ரைவை மறுபடியும் கணினியில் செருகுங்கள்உடனேடெஸ்க்டொப் திரைக்கு வந்து விடும்