
டென் மினிட் மெயில் (10 Minute Mail) என்பது என்பது பயன் படுத்திவிட்டு நிறுத்தி விடக்கூடிய ஒரு வித்தியாசமான, தற்காலிகமான மின்னஞ்சல் சேவை. இந்த மின்னஞ்சல் சேவை வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே செயற்பாட்டில் இருக்கும். பத்து நிமிடங்களுக்குள் உங்கள் விருப்பம் போல் செய்திகளை அனுப்பபவும் பெறவும் முடியும். இந்த 10MinuteMail இணைய தளத்தினுள் நுழைந்ததுமே ஒரு தற்காலிகமான மின்னஞ்சல் முகவரி உங்களுக்கு வழங்கப்படும். உங்களைப் பற்றிய எந்த விவரங்களும் கேட்கப்படமாட்டாது. பதிவு செய்ய வேண்டிய தேவையுமில்லை. கடவுச்சொல் கூட அவசியமில்லை. பத்து நிமிடங்கள் மட்டுமே செயற்படும் இந்த டென் மினிட் மெயில் மின்னஞ்சல் சேவையை அவசர தேவைகளுக்காகவும் தற்காலிகமான தேவைகளுக்காகவும் பயன் படுத்திக் கொள்ளலாம். இணைய தள முகவரி : https://10minutemail.com
Post Comment