Map Network Drive  பயன் பாடு என்ன?

வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் வைத்திருப்பின் அவற்றை இணைத்து ஒரு வலையமைப்பை உருவாக்கிப் பயன் படுத்துவதன் மூலம் நீங்கள் பல வசதிகளைப் பெறலாம். அவற்றில் போல்டர்களை பகிர்வதன் (sharing) மூலம் இலகுவாக ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினுக்குப் பைல்களைப் பரிமாறலாம்.

விண்டோஸ் 8.1 மர்றும் 10 பதிப்புகளில் ஒரு ட்ரைவ் ஒன்ரைப் பகிரப் பின்வரும் வழிமுரையைப் கையாளுங்கள். முதலில் This PC    திறந்து கொள்ளுங்கள் நீங்கள் பகிர விரும்பும் ட்ரைவ் ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Share with -à Advanced Sharing தெரிவு செய்ய வரும் ஒரு பெட்டியில்  மீண்டும் Advanced Sharing பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது தோன்றும் பெட்டியில் Share this folder தெரிவு செய்யுங்கள். வேறு தெரிவுகள் அவசியம் இல்லை)

அதே போல் ஒரு போல்டரைத் தெரிவு செய்ய போல்டரின் மேல் க்ளிக் செய்து வரும் மெனுவில் Share with -à Home Group தெரிவு செய்ய வரும் பெட்டியில் yes, Share this item தெரிவு செய்யுங்கள்.



ஒரு கணினியில் போல்டர் ஒன்றைப் பகிர்ந்து கொண்ட பின்னர் அடுத்த கணினியிலிருந்து இரண்டு வழிகளில் அதனை அணுகலாம். முதல் வழி அந்த போல்டரை நேரடியாகத் திறந்து கொள்வதாகும். அதாவது File explorer இல் Network ஐகணை க்ளிக் செய்ததும்  அங்கு  உங்களல் வலையயமைப்ல் இனைந்துள்ள கணினிகளைக் கான்பிக்கும். அக்கணினிகலுக்குரிய ஐக்கனில் க்ளிக் செய்ய அக்கணினிகளில் பகிரப்பட்டிருக்கும் போல்டர்களையும் கானலாம். அதிலிருந்து நேரடியாகவே ஃபைல்களைத் திறந்து  கொள்ளலாம்.

இரண்டாவது வழி முறை நெட்வர்க் ட்ரைவ் மூலம் அந்த போல்டரை அணுகுவதாகும். அதாவது பகிரப்பட்டுள்ள ஒரு போல்டரை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தப் போவதாயிருந்தால்  அந்த போல்டரைக் குறிக்க வென ஒரு ட்ரைவ் லெட்டர் வழங்கி விட்டால் அதனை This PC   ஐக்கனைத் திறப்பதன் மூலம் அணுகலாம்.  அதற்கே விண்டோஸில் உள்ள  இந்த  Map Network Drive  பயன்படுகிறது. ஆனால் இவ்வசதியைப் பயன் படுத்த உங்கள் கணினி ஒரு வலையமைப்பில் இணைந்திருத்தல் அவசியம்.மேலும் அவ்வலையமைப்பிலுள்ள கணினியில் ஒரு ட்ரைவ் அல்லது ஃபோல்டர் பகிரப்பட்டிருக்க வேண்டும்.

நெட்வர்க் ட்ரைவை Network Drive  உருவாக்கப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.

This PC   ஐக்கன் திறந்து கொள்ளுங்கள். அங்கு Computer  டேபின் கீழ்  Map Network Drive என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது படத்தில் உள்ளது போன்ற் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு Drive எனும் இடத்தில் விரும்பிய ஒரு ட்ரைவ் லெட்டரைத் தெரிவு செய்யுங்கள்.. அடுத்து Folder எனுமிடத்தில் கணினியில் பகிரப்பட்டுள்ள போல்டருக்கான Path வழங்க வேண்டும். அதற்கு நீங்கள் பிரவுஸ் பட்டனில் க்ளிக் செய்து அதன் அமைவிடத்தைக் சுட்டிக் காட்டி விட்டு Finish பட்ட்னில் க்ளிக் செய்யுங்கள். இப்போது அந்த பகிரப்பட்ட போல்டரை  This PC   திறப்பதன் மூலம் அடையலாம்.

நெட்வர்க் ட்ரைவ் அவசியமில்லையெனின் அதே Computer  டேபின் கீழ்  Disconnect Network Drive ட்ரைவ் என்பதைத் தெரிவு செய்யுங்கள். அல்லது This PC   திறந்து உரிய நெட்வர்க் ட்ரைவின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்தும் இணைப்பை துண்டிக்கலாம்.