எழுத்துருக்களை நிர்வகிக்க Wordmarkit


இணையத்தில்  ஏராளம் எழுத்துருக்கள் கொட்டிக் கிடக் கின்றன. அதுவும் அவை இலவசமாகவே கிடைக்கின்றன என்பதனால் நாமும் நமது கணினியில் நூற்றுக்கு மேற்பட்ட எழுத்துருக்களை டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்வோம். இவ்வாறு ஏராளமான எழுத்துருக்களை நிறுவிக் கொண்டாலும் ஆவணமொன்றை டைப் செய்து விட்டு அதற்குப் பொருத்தமான எழுத்துருக்களை தேடிப் பிரயோகிப்பதற்குத் திண்டாடிப் போன அனுபவம் கணினிப் பயன்ர் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.ஏனெனில் டைப் செய்த எழுத்துக்களைத் தெரிவு செய்து பின்னர் அதனை ஒவ்வொரு எழுத்துருவுக்கும் மர்ற்றி மாற்றி திருப்தியடையும் மட்டும் நாம் மாற்றிக் கொண்டேயிருப்போம்.

இது போன்ற நிலைமகளுக்கு நமக்குத் தீர்வைத் தருகிறது www.wordmark.it எனும் இணைய தளம். இது ஒரு ஓன்லைன் சேவையாகும்.இந்த இணைய சேவை மூலம் பிரவுஸர் விண்டோவிலேயே நாம் விரும்பும் டெக்ஸ்டை நமது கணினிய்ல் நிறுவியுள்ள அனைத்துஎழுத்து வடிவங்களிலும் காண்பிக்கிறது,

இதனை செயற்படுத்திப் பார்ப்பதற்கு www.wordmark.it எனும் இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு wordmark எனும் இடத்தில் ஒரு க்ளிக் செய்து நீங்கள் விரும்பும் டெக்ஸ்டை டைப் செய்யுங்கள். பின்னர் load fonts எனும் பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது ஒரே வினாடியில் உங்கள் கணினியில் நிறுவியுள்ள அனைத்து எழுத்துருக்களிலும் நீங்கள் டைப் செய்த வார்த்தையை காண்பிக்கும்.

மேலும் negative பட்டனில் க்ளிக் செய்வதன் மூலம் கருமை நிறப் பின்னணியில் வெள்ளை நிறத்தில் எழுத்துக்களைக் காணலாம். அத்தோடு கட்டணம் செலுத்துவதன் மூலம் மேலும் பல எழுத்துரு சார்ந்த வசதிகளைத் தருகிறது இந்த wordmark.it இணைய தளம்.