கூகல் செயலியில் பரீட்சித்துப் பார்க்கப் பத்து குரல் வழி கட்டளைகள்



மனித  குரலைப் புரிந்து கொண்டு அதன் படியே செயற்படும்  Speech recognition எனும்  குரலறியும் தொழில் நுட்பமானது அண்மைக்  காலங்களில் வியப்பூட்டும்  வகையில்  வளர்ச்சி கண்டு வருகிறது   கீழே தரப்பட்டிருக்கும் குரல் வழி கட்டளைகளை  உங்கள் அண்ட்ரொயிட் கருவியில் செயற்படுத்திப் பாருங்கள்  வியந்து போவீர்கள்.

இதனை செயற்படுத்த உங்கள் அண்ட்ரொயிட் கருவியில் Google, Google Now அல்லது Google Assistant  செயலிகளுள் எதனையாவது  நிறுவியியிருத்தல் அவசியம்.  கூகில் செயலி இருந்தாலே போதுமானது. இப்போது கூகில் செயலியை இயக்கி மைக்ரோபோன் ஐக்கனை தட்டுங்கள். அல்லது OK. Google எனச் சொல்லுங்கள். இப்போது உங்கள் கட்டளைக்காக கூகில்  காத்திருக்கும். (சில கட்டளைகளை நிறை வேற்ற இணைய இணைப்பு அவசியம் என்பதை மறாவாதீர்கள்.)


  • Open [dailynews.lk]
  • Take a picture / Take a photo
  • Open [Facebook]
  • Turn [on / off] [Bluetooth]
  • Turn [on / off] [Wi-Fi]
  • Turn [on / off] [ Flashlight]
  • Set alarm for [4:30 am]
  • Set a timer for [2 minutes]
  • Turn volume Up
  • Turn volume Down