Android கருவியில் செயலிகள் பயன்படுத்தாமல் கோப்புக்களை மறைக்க




சில நேரங்களில், எமது  ஸ்மார்ட்ஃபோனை நண்பருடன்  பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை வரக்கூடும். அவ்வேளைகளில்  ஸ்மாட்போன் கருவியிலுள்ள  எமது தனிப்பட்ட படங்கள், வீடியோ  மற்றும் ஆவணங்கள் போன்ற கோப்புக்களை  நண்பர்   பார்த்து விடுவாரோ என்ற அச்சமும் ஏற்படும். அதனால் முக்கியமான கோப்புக்களை யாரும் பார்த்திடா வண்ணம் எவ்வாறு பாதுகாப்பது என்ற  கேள்வி உங்களுக்கிருக்கலாம்.

நீங்கள் அண்ட்ரொயிட் பயனராக இருந்தால், கோப்புகள் (files)  மற்றும் கோப்புறைகளை (folders)  மறைக்கப் பயன்படுத்தக்கூடிய ஏராளமான  செயலிகள் கூகில் ப்லே ஸ்டோரில்  உள்ளன. எனினும்  அது உங்கள்  ஸ்மாட்போன் கருவியின் நினைவகம்  மற்றும் தேக்க அலகில்  சில மெகாபைட் அளவு   இடத்தைபிடித்துக்  கொள்ளும். உங்கள் கருவியில் அதிகளவு  நினைவகம் அல்லது சேமிப்பகம் இருக்குமானால் சிக்கல் இல்லை. ஆனால் மிக குறைவாக இருக்கும்போது ​​புதிய செயலிகளை  நிறுவ முடியாமல் போகலாம்.
இருப்பினும், உங்கள் தகவல்களைப் பாதுகாக்க எந்த புதிய செயலிகளையும்  நிறுவ விரும்பவில்லை என்றால், உங்களுக்கு  ஒரு எளிய தீர்வு உள்ளது. மூன்றாம் தரப்பு பயன்பாடுச் செயலிகள் எதுவும் நிறுவாமல் அண்ட்ரொயிட் கருவிகளில் கோப்புகள் மற்றும் கோப்புறைகளை மறைத்து வைக்கப் பின்வரும்  வழிமுறையைக் கையாளலாம்.

ஒவ்வொரு அண்ட்ராய்டு சாதனமும் இயல்புநிலையில்  File manager அல்லது  File explorer  எனும்  கோப்பு நிர்வாக செயலியைக் கொண்டிருக்கும். எனவே நீங்கள் புதிதாக ஒன்றை நிறுவ வேண்டியதில்லை.

முதலில்  File manager அல்லது  File explorer  சென்று  ஒரு புதிய கோப்புறையை (folders) உருவாக்கவும், உங்கள் தனிப்பட்ட கோப்புக்களை   அதற்குள்  (move)  நகர்த்தவும்.

இப்போது உங்கள் கோப்புறையின் பெயருக்கு முன்னால் ஒரு புள்ளியைச் (.) சேர்த்து உங்கள் கோப்புறையை  பெயர் மாற்றம்  செய்ய (rename) வேண்டும்.  உதாரணமாக உங்கள் கோப்புறை பெயர் New folder என இருந்தால் அதன் பெயரை  .New folder என மாற்றிக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் கோப்புறை மறைந்துவிடும். ஸ்மாட் போன் கருவியில்  கோப்புக்கள் மறைந்திருப்பதால் அதனையிட்டுக் கவலைப் பட  வேண்டியதில்லை. ஒரு சாதாரண கோப்புறையைப் போலவே முழு அணுகலும் உங்களுக்கு கிடைக்கும்.
இப்போது உங்கள் கோப்புறையைப் பார்க்க வேண்டுமாயின்  File manager இல்   மறைக்கப்பட்ட கோப்புகள் மற்றும் கோப்புறைகளைக் காட்சிப்படுத்துவதற்கான கட்டளையை (Show hidden files and folders) தெரிவு  செய்யுங்கள்.

இது உங்கள் Android சாதனத்தில் மூன்றாம் தரப்பு பயன்பாடு இல்லாமல் ஒரு கோப்புறையை மறைக்க எளிதான வழி முறையாகும்

https://youtu.be/lpekG-QWICk