பேஸ்புக்கில் நண்பருக்குத் தெரியாமலேயேஅவரை நட்பு நீக்கம் செய்வதுஎப்படி?




நமக்குப் பிடிக்காத சில நபர்கள் எமது முக நூல் பக்கத்தில்  நண்பர்களாக இருப்பர். முடிவற்ற சுய தம்பட்டப் பதிவுகள், தொடர்ச்சியான வெறுப்பூட்டும் செல்ஃபீகள், வீண் அரசியல்  அரட்டைகள், பயனற்றபகிர்வுகள்  எனமுக நூலில் சில நண்பர்கள் நமதுஉயிரை வாங்குவர். அவர்களின் பதிவுகள் எம்மைஅடிக்கடிவெறுப்பூட்டினாலும் மறுபடிஎங்காவதுஅவரைப் பாதையில் சந்திக்க நேரிடும் போது நாம் சங்கடத்திற்குள்ளாகவேண்டியிருக்கும் என்பதனால் நாங்கள் உடனடியாக அவர்களை நட்பு நீக்கம் (Unfriend)செய்துவிடுவதில்லை. அதற்கும் மேலாக நாம் அவர்களை நட்புநீக்கம் செய்துவிட்டால் மறுபடிஅவர்களின் ப்ரொஃபைல் பக்கத்தை எம்மால்  எட்டிப் பார்க்கமுடியாமல் போய் விடும் என்பதும் ஒருகாரணமாக இருக்கலாம்.

நல்லவேலையாக ஃபேஸ் புக்கில் நண்பருக்குத் தெரியாமலேயே அவரைநட்பு நீக்கம் செய்யும் வசதியுள்ளது. நட்பு நீக்கம் செய்யும் வசதியோடு தேவைப்படும் போது அவரது ப்ரொபைல்  பக்கத்தைஎட்டிப் பார்க்கும் உரிமையும்  கூட கிடைக்கிறது.

இந்தவசதியைஎவ்வாறு பயன் படுத்துவது?  ஒருவரை நட்புநீக்கம்  செய்ய நீங்கள் முடிவெடுத்தால் முதலில் அவரது ப்ரொஃபைல் பக்கத்திற்குச் செல்லவேண்டும். அங்கு ''Following' 'பட்டனில் க்ளிக் செய்யும் போதுஒருமெனுதோன்றும். அங்கு''Unfollow' 'எனஒருதெரிவைஉங்களுக்குக் காண்பிக்கும். 'Unfollow' க்ளிக் செய்யும் போதுஉங்கள் காலக் கோட்டிலிருந்து(time line))அந்தநண்பரின்அனைத்துசெயற்பாடுகளுக்குமானதடயங்களும் நீக்கப்பட்டுவிடும். அன்ஃபலோ செய்யப்பட்ட அந்த நண்பர் முக நூலில் உங்கள் நண்பராகவே இருப்பார். ஆனால் அவரதுபதிவுகள் எதுவும் உங்களை வந்து சேராது