பிரபலமாகி வரும் Dark Mode



இருண்ட பயன்முறை (Dark Mode) என்பது பயனர் இடைமுகத்தை இருண்டதாக மாற்றும்  ஒரு மென்பொருள் தெரிவு.  இது வெண்மையான அல்லது  பிரகாசமான பின்னணி கொண்ட நிறத் தை கருமையாக மாற்றுவதோடு எழுத்துக்களின் வண்ணத்தை  வெண்மையாக மாற்றுகிறது.

டார்க் மோட்  எனும் இருண்ட பயன்முறை, அல்லது  "இரவு நேரப்  பயன்முறை (night mode) " பல ஆண்டுகளாக  டெவலப்பர்கள் எனும் மென்பொருள் விருத்தியாளர்களிடையே  மிக விருப்பமான தெரிவாக இருந்து வருகிறது. டெவலப்பர்கள் தினமும்  பல மணிநேரம் மூலக் குறியீடுகளை ( )   கணினித் திரையிலேயே  உற்று நோக்க வேண்டியிருப்பதால்,  வெண்மையான பின்னணியை கொண்ட பயன் முறை  அதிகளவு  கண் அயர்ச்சியை அல்லது சோர்வைக்  அவர்களுக்குக் கொடுக்கிறது. அதனால் கருமையான  பின்னணி கொண்ட பயன் முறையை  டெவலப்பர்கள் விரும்புகிறார்கள். தற்போது  விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ் இரண்டு இயங்கு தளங்களிலும் இருண்ட  பயன் முறை  வசதி  நிரந்தரமான இணைக்கப்பட்டிருப்பதால்  , அனைத்து கடை நிலை கணினி பயனர்களும் கூட  விரும்பும் தெரிவாக இருண்ட பயன்முறை மாறியுள்ளது.

இருண்ட பயன்முறை ஏற்கனவே விண்டோஸ் பழைய பதிப்புகளிலும் இருந்தாலும் மேலதிக வசதிகளுடனான இருண்ட பயன் முறையை ஆதரிக்கும் விண்டோஸின் முதல் பதிப்பு விண்டோஸ் 10 அக்டோபர் 2018 புதுப்பிப்புடன் வெளிவந்து. .

இருண்ட பயன்முறைக்கென  நிலையான வண்ணத் தெரிவு எதுவும் இல்லை.  ஒவ்வொரு டெவலப்பரும் வித்தியாசமான  வண்ணங்களை டாக் மோடில்    பயன் படுத்தக் கூடியவாறு மென்பொருள்களை வடிவமைக்கிறார்கள்.  அனேகமான  இருண்ட  பயன் முறைகள்  கருப்பு நிறம் கொண்டதாக இருந்தாலும்  சில இருண்ட பயன் முறைகள் கடும் சாம்பல் நிறத்திலும்  இன்னும் சில  கடும் நீல நிறத்திலும்  காணப்படும்.

கணினிகளில் மட்டுமன்றி  தற்போது கையடக்கக் கருவிகளும் கூட இருண்ட பயன் முறை வசதி  அறிமுகமாகி வருகிறது. இருண்ட பயன்முறைக்கு மாறுவதற்கான தெரிவு  தற்போது  அனேகமான கணினி பயன் பாட்டு மென்பொருள்களிலும் கையடக்கக் கருவிகளுக்கான செயலிகளிலும்  இணைக்கப்பட்டுள்ளன.

பிரவுசர் எனும் இணை உலாவிகளும் இருண்ட பயன் முறை வசதியுடன் வருகின்றன. சில இணைய தளங்கள் கூட டாக் மோடை இலகுவாக மாற்றுவதற்கான வசதியுடன் கூடிய பட்டனைக் கொண்டுள்ளன.
விண்டோஸ் 10 இல்  Settings Personalization Colors >'Dark  தெரிவு செய்து இருண்ட பயன் முறைக்கு மாற்றலாம்.

அண்ட்ராயிட் கருவியில் பேஸ் புக் செயலி இன்னும் டாக் மோடிற்கு ஆதரவு வழங்காவிட்டாலும் பேஸ்புக் மெஸ்ஸெஞ்சர்  (Facebook Messenger) செயலியில் அந்த வசதி இனைக்கப்பட்டுள்ளது, மெஸ்ஸெஞ்சரில் உங்கள் பேஸ்புக் கணக்கிற்குரிய  சுய விவரப்  படத்தின் மீது தட்டும் போதே,  'Dark mode' செயற்படுத்தக் கூடிய பட்டனை காணலாம்.