மைக்ரோசாஃப்ட் வேர்டில் உரையை நகலெடுக்கவும் நகர்த்தவும் எளிய வழி


வேர்டில் உரை அல்லது படங்களை நகலெடுக்கவும் நகர்த்தவும்   Ctrl + C>   Ctrl + X    மற்றும் Ctrl + V  குறுக்கு விசைகளை அனைவரும் பயன் படுத்துகிறோம். ஆனால் அதை விட இலகுவாக ஒரு வழி  மைக்ரோசாஃப்ட் வேர்டில் இருக்கிறது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.
Move to where? எங்கே நகர்த்துவது?

நீங்கள் நகர்த்த விரும்பும் உரை அல்லது படத்தை தெரிவு செய்த  பின்னர் கு2 விசையை அழுத்துங்கள். அப்போது வேர்ட் விண்டோவின் கீழ் இடது மூலையில் Move to where? (எங்கே நகர்த்துவது) எனும் செய்தி தோன்றும். அதே ஆவணத்தில் நீங்கள் உரை அல்லது படத்தை செருக விரும்பும் இடத்திற்கு மவுஸை நகர்த்தி, ஒரு க்ளிக் செய்து விட்டு  நுவெநச விசையை  அழுத்துங்கள். அவ்வளவுதான்! நீங்கள் தேர்ந்தெடுத்த உரை இருந்த இடத்திலிருந்து புதிய இடத்தில் ஒட்டப்படும்.
Copy to where? எவ்விடத்திற்கு நகலெடுப்பது?

அதேபோல் ஒரு  உரை அல்லது படத்தை நகலெடுத்து ஒட்ட விரும்பினால், அதாவது, உங்கள் ஆவணத்தில்  இரண்டு இடங்களிலும்  ஒரே படம் அல்லது உரை  தோன்ற வேண்டும் எனில்,   நீங்கள் நகலெடுக்க விரும்பும் உரையைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ஷிப்ட் shift)  + F2 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தும் போது Copy to where?  எனும் செய்தி  விண்டோவின் இடது கீழ் மூலையில் தோன்றும்.

அடுத்து, அதன்  நகலைப்  பெற விரும்பும் இடத்திற்கு சுட்டியை நகர்த்தி, ஒரு க்ளிக் செய்து, Enter  விசையை  அழுத்துங்கள். இப்போது அந்தப் படம் அல்லது உரைப் பகுதி நகல் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஆனால் இங்கு F2 மற்றும் shift + F2 குறுக்கு வழிகள்  ஒரு முறை மட்டுமே செயல்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  இது வழமையான நகலெடுக்கும்  செயற்பாடு போன்று கணினி நினைவவக க்ளிப்போர்டில் தற்காலிகமாக சேமிக்கப்படமாட்டாது