வாட்ஸ்-அப் பயன் பாட்டில் தவிர்க்க வேண்டிய தவறுகள்


கையடக்கத் தொலைபேசிகளில்  உடனடி செய்திகளை (instant messages)  அனுப்பப் பயன்படும் செயலிகளில்  வாட்ஸ்-அப் மிகவும் பிரபலமானது. வாட்ஸ்-அப் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கமாகி விட்டது. ஆனால் பெரும்பாலானவர்கள்  வாட்ஸ-;அப் பயன் பாட்டில்  சில  தவறுகளை விடுகிறார்கள். பலர்  தங்களது  முக்கியமான மற்றும் தனிப்பட்ட விஷயங்களை நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறருடன் வாட்ஸ்-அப்பில் பகிர்ந்து கொள்கிறார்கள். இது சரியான விடயம் அல்ல. நீங்கள் வாட்ஸ்-அப் பயன் படுத்தும் போது  சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இங்கு சில தவறுகள் பட்டியலிடப்படுகின்றன. அவற்றை முடிந்தளவு தவிர்த்துக் கொள்ளுங்கள்.

1. புதிய செய்திகளின் முன்னோட்டத்தைக் காண்பிக்கிறதா?
உங்கள் தொலைபேசித் திரை பூட்டப்பட்டிருந்தாலும் கூட, திரையில் புதிய செய்திகளின்  முன்னோட்டத்தை (Pசநஎநைற) வாட்ஸ்-அப் காண்பிக்கும். தொலைபேசியின் அருகிலுள்ள எவரும் அவற்றைப் படிக்க முடியும். எனவே இந்த அம்சத்தை முடக்கி வைப்பதே பாதுகாப்பானது.  அண்ட்ராயிட் கருவியில் WhatsApp settings > Notifications > Pop up notification > No pop up  ஊடாவும் ஐஃபோன் கருவியில் WhatsApp settings > Notifications > Show Preview – and turn it off  ஊடாவும் முடக்கலாம்.
2.  படங்கள் மற்றும் காணொலிகள் தானாகவே சேமிக்கப் படுகின்றனவா?
உங்கள்  தொலைபேசி  சேமிப்பகம் அடிக்கடி நிரம்பி விடுகிறதா? அப்படியாயின் வாட்ஸ்-அப்  தகவல்கள் மூலம் நீங்கள் பெறும் அனைத்து படங்களையும் வீடியோக்களையும் உங்கள்   தொலைபேசி தானாகவே சேமிக்கிறதா என்பதைச் சரிபாருங்கள். அவ்வாறு அனைத்தையும் சேமிப்பதாக இருந்தால் அமைவுகளை மாற்றுவதன்  மூலம் நீங்கள் விரும்புவதை மட்டும் சேமிக்குமாறு  தேர்வு செய்யலாம்.
அண்ட்ராயிட் கருவியில் WhatsApp settings > Data usage > Media auto download;;   ஊடாகவும் ஐஃபோன்  கருவியில் WhatsApp settings > Chats > Save to Camera Roll and turn it off ஊடாகவும் அமைவுகளை மாற்றிக் கொள்ளுங்கள்.
3. படங்கள் மற்றும் காணொலிகளைப் பகிற வேண்டுமா?
நீங்கள் வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை, புகைப்படத்தை அல்லது வீடியோவை ஒருவருக்கு அனுப்பும்போது,  அவர் கையில்  அவற்றின்  ஒரு நகல் கிடைத்து விடுகிறது.  நீங்கள் அவற்றை யாருக்கு அனுப்புகிறீர்கள் என்பதில் கவனமாக இருந்தாலும்,  கிடைக்கப் பெறும் அந்த நபர்  எண்ணற்ற நபர்களுக்கு  அந்நகலை உடனடியாக அனுப்பி விட முடியும். அதனால்  எதையாவது பகிர முன் , மற்றவர்கள் அதைப் பார்ப்பதை நீங்கள் அனுமதிக்கிறீர்களா  என்பதை  நீங்களே  உங்களைப் பலதடவை கேட்டு விட்டுப் பகிருங்குள்.

4. புரளிச் செய்திகளை நம்பலாமா?
மோசடி (Scams) மற்றும் புரளிச் செய்திகள் (hoax messages) உங்கள் தொடர்புப் பட்டியலிலுள்ள இலக்கங்களிலிருந்தோ  அல்லது  அறிமுகமில்லாத இலக்கங்களிலிருந்தோ வரக்கூடும். அச்செய்தி உண்மை போன்றும்  நம்பக் கூடியது போன்றும இருக்கும். நீங்கள் அச்செய்தியை பகிறாவிட்டால் உங்களுக்கு எதிர் காலத்தில் கெடுதிகள் நடக்கக் கூடும் என சில வேளை அச்சுறுத்தலும் விடுக்கும். சில மோசடிகள் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பெறும் நோக்கில் இருக்கும். இவ்வாறான செய்திகளை நம்பி விடாமல் இருப்பதோடு  அவற்றைப் பகிர்ந்தோ  இணைப்புகளில்  தட்டியோ மோசடிகளில் சிக்கி விடாமல் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். 

5.  சுருங்கிய இணைப்புகளில் கவனமாயிருங்கள்
சுருக்கப்பட்ட இணைப்பிற்குள் shortened link) பாதுகாப்பற்ற ஒன்றை மறைப்பது எளிது. அவ்வாறன   சந்தேகத்திற்குரிய  சுருக்கப்பட்ட இணைப்புகள் உங்களுக்கு அறிமுகமான  ஒருவரால் அனுப்பப்பட்டிருந்தாலும் கூட அவற்றைத் தட்டவோ  அல்லது யாரிடமும்  பகிறவோ  வேண்டாம். 
 
6.  செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்யுங்கள்
வாட்ஸ்-அப்பில்   தவறான தகவல்களையும் வதந்திகளையும்  பரப்புபவர்கள்  ஏராளம். சில செய்திகள்  பீதியையும்  ஏற்படுத்தும். இவ்வாறான செய்திகளைப் பகிரமுன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ளுங்கள்.  இதன் மூலம் அத்தவறான செய்தி உங்களால்தாள் பரப்பப்பட்டது எனும் குற்றச் சாட்டிலிருந்து; உங்களைக் காத்துக் கொள்ளலாம்.
7.  செய்திகள் தவறாப் புரிந்து கொள்ளப்படலாம்
நேரடி உரையாடல்களில் வெளிப்படும்  உணர்வுகள்  உரைச் செய்திகளைப் படிக்கும் போது   வெளிப்படுவதில்லை.   சில வேளை  நேரடி உரையாடலில்  ,நகைச்சுவையாக  சொல்லப்படும் விடயங்கள் கூட தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. முகத்தை காண்பிக்காத குரலைக் கேட்க முடியாத ஒரு உரைச் செய்திகளில்  இந்த உணர்வுகளை  நாம் எவ்வாறு எதிர் பார்க்க முடியும்?.  எனவே நீங்கள் அனுப்பும் செய்தியின் தொனி சில வேளை பெறுநரால் தவறாப் புரிந்து கொள்ளப்படலாம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

8.  தொடர்புப் பட்டியலில் இல்லாத நபர்களுடன் அரட்டைகளில் இணையாதீர்கள்
குழு அரட்டையில் (Group chats) ஈடுபடும்போது அக் குழுவில் உள்ள அனைவரும் உங்கள் தொலைபேசி எண் காண்பிக்கப்படுகிறது.  அதனால் உங்களுக்கு அறிமுகமில்லாத நபரிடமும் உங்கள் தொலைபேசி இலக்கம் சென்றடைகிறது என்பதை நினைவில் கொண்டு மிக நம்பகமான குழுக்களில் மட்டும் இணைந்து  கொள்ளுங்கள்.
9.  நிலைத் தகவல் (status updates) இற்றைப் படுத்தலை தொடர்பு பட்டியலுடன் வாட்ஸ்ஸப்  பகிர்கிறது
உங்கள் தொடர்புப் பட்டியலில் உள்ள அனைவரும்  உங்கள் நிலைத்தகவல்  புதுப்பிப்புகள் வாட்ஸ்-அப்  பகிர்கிறது. எனவே அந் நிலைத் தகவல்கலை யாரோடு பகிர வெண்டும் என்பதை  WhatsApp Settings -> Account ->  Privacy -> Status  ஊடாக மாற்றிக் கொள்ளுங்கள்.
10.  தொலைபேசியை விற்கும்போது சிம் அட்டையையும் சேரத்துக் கொடுத்து விடாதீர்கள்.
உங்கள்  தொலைபேசியை வேறு ஒரு நபருக்கு விற்க நேரிட்டால்  சிம் (SIM)  கார்டையும் சேர்த்து கொடுத்து விடாதீர்கள். அதன் மூலம்  புதிய உரிமையாளர் உங்கள் பழைய வாட்ஸ்அப் அரட்டைகளை  அணுகலாம்.  மேலும்  இந்த எண்ணுக்கு அனுப்பப்படும் புதிய செய்திகளையும்  பெறலாம். ஒருவேளை உங்கள் வாட்ஸ்அப் கணக்குடன் தொடர்புடைய தொலைபேசி எண்ணை மாற்ற வேண்டுமாயின, வாட்ஸ்அப் Settings -> Account  -> change number   தெரிவு செய்து மாற்றிக்   கொள்ளுங்கள்.  இதன்  மூலம்  உங்கள் பழைய கணக்கிற்குரிய தரவுகளை புதிய எண்ணுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.
11.          வாட்ஸ்-அப் பயன்பாட்டிற்கு கணினியைப் பயன்படுத்தும் போது
வாட்ஸ்அப் செயலியை கணினியிலும் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் அதற்கு பொது இடங்களிலுள்ள கணினிகளைப் பயன் படுத்தாதீர்கள். ஒரு வேளை அவ்வாறு பயன் படுத்த நேரிட்டால்   Whatsapp Web  லிருந்து முறையாக வெளியேற மறந்து விடாதீர்கள். ஒரு வேளை மறந்துவிட்டால், கணினியைப் பயன்படுத்தும் அடுத்த நபருக்கு உங்கள் கணக்கினை முழுமையாக  அணுக்க கூடியதாய் இருக்கும்.
எனவே வாட்ஸ்அப்பின் வலை பதிப்பில் உள் நுழையும்போது, ““Keep me signed in"என்பதைத் தேர்வு நிலையிலிருந்து மாற்றி விடுவதோடு (uncheck)  உங்கள் வேலை முடிந்தும்  முறையாக வெளியேறுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.