Microsoft Math Solver அண்ட்ராயிட் செயலி
நீங்கள் கணித பாடத்தை
வெறுக்கும் ஒரு பாடசாலை மாணவரா? இதோ உங்களுக்கு உதவிக்கு வருகிறது
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சமீபத்திய
அறிமுகமான Math Solver எனும்
அண்ட்ராயிட் செயலி. இதன்; மூலம்
கணித பாடம் சார்ந்த அனைத்து விதமான சமன்பாடுகளையும் இலகுவாகத் திர்க்க முடிகிறது.
மிக சிறப்பாகச் செயற்படும் இச் செயலியில் கணித சமன்பாட்டை கேமரா மூலம்
புகைப்படம் எடுத்தல், அதைத்
தட்டச்சு செய்தல், அல்லது
திரையில் விரலால் எழுதுதல் என மூன்று வழிகளில் உள்ளீடு செய்ய முடிகிறது
இதே போன்ற வசதியை வழங்கும் ஏராளமான பிற கணித செயலிகளும் பயன் பாட்டில் உள்ளன. ஆனால் மைக்ரோசாஃப்டின் Math Solver முழுமையான கணிதம்
சார்ந்த சமன்பாடுகளைத் தீர்க்க வல்ல
செயலியாகத் தெரிகிறது. Phழவழஅயவா எனும் கணித செயலி ஏற்கனவே பயனர்களை கணித சமன்பாடுகளின்
புகைப்படங்களை எடுத்து அவற்றைத் தீர்க்க
அனுமதிக்கின்றது. எனினும்
மைக்ரோசாப்ட் ஆயவா Photomath ஃபோட்டோமேத்
செயலியில் இல்லாத பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

மாணவர்கள் கணித பாட வீட்டு வேலைகளைச் செய்ய இதைப் பயன்படுத்துமாறு
நான் பரிந்துரைக்கவில்லை, ஆனால் சில சமன்பாடுகளைத் தீர்ர்ப்பதற்காக நீண்ட நேரம்
போரடுபவர்களுக்கு இது மிகவும் உபயோகமான
செயலி எனலாம்.
Post Comment