Kilobyte தெரியும், Kibibyte தெரியுமா?

kibibyte mebibyte - Kilobyte தெரியும்,   Kibibyte தெரியுமா? 
Kibibyte Kilobyte

டிஜிட்டல் தரவு சேமிப்பில்  Kilobyte  என்பது 1,000 பைட்டுகளைக் (byte  குறிக்கும் என்பது நீங்கள் அறிந்ததுதான்.  அதாவது ஒரு கிலோபைட் என்பது  10 ^ 3 அல்லது 1,000 பைட்டுகள் என அளவிடப்படுகிறது.இங்கு  கிபிபைட்  (Kibibyte)  எனும் பதமும்  தரவு சேமிப்பின் ஓர் எண்ணிக்கையைக்  குறிக்கப் பயன் படுகிறது. ஒரு கிபிபைட் சரியாக 1,024 பைட்டுகளைக் குறிக்கிறது. அதாவது இது இரண்டின் ( 2)  10 ஆம் வலு  அல்லது  2^10 =  1,024  பைட்டுகளுக்குச் சமமாகும்.  கிபிபைட்டின் சுருக்கக் குறியீடாக KiB பயன் படுத்தப்படுகிறது. 

கிலோபைட் என்பது 1000 பைட்டுகளா அல்லது 1024 பைட்டுக்களா எனும் மயக்க நிலையைத் தவிர்ப்பதற்கே  கிபிபைட் எனும் சொல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதேபோல்  1,024 கிலோ பைட்டுகள் ஒரு  மெபிபைட்  எனவும் 1000 கிலோ பைட்டுள் மெகா பைட் எனவும் பிரித்தறியப்படுகிறது. 

அதேபோல் mebibyte Gibibyte tebibyte ஆகிய  சொல்லாடல்களும் பயன் பாட்டில் உள்ளன.