WhatsApp Business வாட்சப் பிசினஸ்

WhatsApp Business வாட்சப் பிசினஸ் : ஃபேஸ்புக் நிறுவனம், சிறு வணிக உரிமையாளர்களை மனதில் வைத்து உருவாக்கியிருக்கும் உடனடி செய்திச் சேவை செயலிதான்  வாட்சப் பிசினஸ். இதன் மூலம் சிறு வணிக உரிமையாளர்கள்  தமது வாடிக்கையாளர்களுடன் இலகுவாக   தொடர்புகொள்வதற்கும், தமது வணிகத்தை வளர்ப்பதற்கும்  முடிகிறது

whatsapp business - WhatsApp Business வாட்சப் பிசினஸ்
whatsapp business

வாட்சப் பிசினஸைப் பயன்படுத்தும் வணிகங்கள் சாதாரண வாட்சப் பயனர்களையும்  எளிதாக  இணைக்க முடியும், சாதாரண வாட்சப் பயனர்கள்  வாட்சப் பிசினஸ் செயலியை  நிறுவ வேண்டிய அவசியமில்லை சாதாரண வாட்சப்பயனர்கள் வாட்சப் பிசினஸ் செயலியால் தொடர்பு கொள்ளப்படும் போது தாம் தொடர்பு கொண்டது ஒரு வணிகக் கணக்கென (Business Account) அவர்களுக்குக் காண்பிக்கப்படும். .

whatsapp business 2 - WhatsApp Business வாட்சப் பிசினஸ்
whatsapp business

உங்களிடம் வெவ்வேறு வணிக மற்றும் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் இருந்தால், நீங்கள் ஒரே தொலைபேசியில் வாட்சப் பிசினஸ் மற்றும் வாட்சப் மெசஞ்சர் இரண்டையும் நிறுவி, அவற்றை வெவ்வேறு எண்களுடன் பதிவு செய்யலாம்.

வாட்சப் பிசினஸ் வாட்சப் மெசஞ்சரில் உள்ளது  போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதுடன் கூடுதலாக, பின்வருவனவற்றை  உள்ளடக்குகிறது:

label - WhatsApp Business வாட்சப் பிசினஸ்
whatsapp business

1 வாடிக்கையாளர்களால் எளிதில் இனங்காணக்கூடியவாறு உங்கள் முகவரி, தொலைபேசி எண், வணிகம் பற்றிய  விவரங்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் இணையதள  முகவரி போன்ற வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ள தகவல்களுடன் வணிக சுயவிவரத்தை – Business Profiles உருவாக்க அனுமதிக்கிறது.

2. Smart Messaging Tools எனும்  வாட்ஸ்அப் செய்தியிடல் வசதி மூலம்  நீங்கள் அடிக்கடி அனுப்பும் பதில் செய்திகளை உருவாக்கி சேமிக்கவும் அவற்றை  மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும் உங்களை அனுமதிக்கிறது.  எனவே பொதுவான கேள்விகளுக்கு எந்த நேரத்திலும் எளிதாக பதிலளிக்க முடியும். இதனை  “விரைவு பதில்கள்”. “Quick Replies”  என்படுகிற து.

quick reply - WhatsApp Business வாட்சப் பிசினஸ்
whatsapp business

அதேபோன்று  “தானியங்கி செய்திகள்” Automated Messages எனும் வசதி மூலம்  நீங்கள் வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும்  போது வரும் செய்திகளுக்கு  பதிலளிக்க முடியாது போகும் சந்தர்ப்பங்களில் தன்னியக்க முறையில் பதில் அளிக்க முடியும்.

மேலும் உங்கள் வணிகத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த வாழ்த்துச் செய்திளையும் உருவவாக்கி அனுப்பலாம்.

familiar messaging - WhatsApp Business வாட்சப் பிசினஸ்
whatsapp business

3. Messaging Statistics எனும் செய்தியிடல் புள்ளிவிவர வசதி மூலம், அனுப்பப்படும் செய்திகளை மதிப்பாய்வு செய்ய வணிகங்களை அனுமதிக்கிறது. உங்கள் செய்திகளில் எத்தனை வெற்றிகரமாக அனுப்பப்பட்டன, எத்தனை வாடிக்கையாளர்களை அடைந்தன எத்தனை படிக்கப்பட்டன, போன்ற முக்கியமான விவரங்களை நீங்கள் அறிந்து கொள்லாம்.

4. வாட்சப் வலை WHATSAPP WEB எனும் வசதி மூலம் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கணினியிலிருந்து   இணைய உலாவியைப் பயன் படுத்தி   வாடிக்கையாளர்களுக்கு எளிதாக பதிலளிக்க முடியும். இது  வாடிக்கையாளர்  சேவைகளைக் கூட்டாக இணைந்து  வழங்க வேண்டிய சந்தர்ப்பங்களில் மிகவும் பயனுள்ள வசதியாக் கருதப் படுகிறது. இந்த வசதி சாதாரண வாட்ஸப் மெஸ்ஸெஞ்ச ரிலும் கிடைக்கிறது. 


whatsapp 1357489 1920 1024x614 - WhatsApp Business வாட்சப் பிசினஸ்
whatsapp

லேண்ட்லைன் / நிலையான எண் ஆதரவுடனும்  வாட்சப் பிஸின்ஸ் செயலியைப் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் வசதி. மேலும் உங்கள் வாடிக்கையாளர்கள் அந்த எண்ணிலும்  செய்திகள் அனுப்பலாம். வாட்சப் நிறுவனம் உங்கள் எண்ணை குறுஞ் செய்தி அனுப்புவதற்குப் பதிலாக ​​தொலைபேசி அழைப்பின் மூலம் சரிபார்க்கும்