Bedtime mode and Sunrise alarm தற்போது அனைத்து அண்ட்ராயிட் கருவிகளுக்கும்

பெட் டைம் மோட் (Bed time mode) வசதியின் மூலம் நீங்கள் தூங்கும் நேரம் அண்மிக்கும் போது தொலைபேசியை மங்கச் செய்து அறிவிப்புகளை (notifications) முடக்கி வைக்கலாம். இதற்குரிய நேரத்தை நீங்கள் முன் கூட்டியே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
மேலும், படுக்கைக்குச் செல்லவும், விரைவாக தூங்கவும் உங்களுக்கு உதவ, படுக்கைக்கு முன் ஒரு நினைவூட்டலைப் பெறுவார்கள். யூடியூப் மியூசிக் தளத்திலிருந்து அமைதியான இசைகளையும் இயக்கலாம்.
அதேபோல் கூகுல் க்லொக் செயலியில் சன்ரைஸ் அலாரங்கள் பாரம்பரிய கடிகார அலாரம் போல் அல்லாமல் உங்களை மிக மெதுவாக தூக்கத்திலிருந்து விழித்தெழச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சன்ரைஸ் அலாரங்கள் படிப்படியாக உங்கள் தொலைபேசித் திரையை பிரகாசமாக்குகின்றன, மேலும் நீங்கள் எழுந்திருக்கும் நேரத்திற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பே நெருங்கி வருவதாக ஒரு காட்சி குறிப்பைக் வழங்குகிறது.

Google Clock செய்லியை புதிதாக மேம்படுத்திக் கொள்வதன் மூலம் இந்த வசதிகளைப் பெறலாம்.
கூகுல் க்லொக் செயலியைத் திறந்ததும் வரும் திரையின் கீழ்ப் பகுதியில் பெட் டைம் மோட் பயன்முறை மற்றும் சன்ரைஸ் அலாரம் என்பவற்றிற்கான டேபை தனித்தனியே காணலாம். அதன் மூலம் நீங்கள் படுக்கைக்குத் தயாராவதற்குத் ஆரம்பிக்கும் நேரம் மற்றும் எழுந்திருக்கும் நேரங்களை மற்றியமைக்கலாம்.
மேலும் Android இன் டிஜிட்டல் நல்வாழ்வு அமைவுகளை (Digital Wellbeing settings) செயல்படுத்தியும் இந்த நேரங்களை மாற்றியமைக்கலாம்.
Post Comment