இணைய கணக்கிற்கு மேலதிக பாதுகாப்பு வழங்கும் 2-Step Verification


2-Step Verification டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் (2-படி சரிபார்ப்பு) அல்லது Two-factor authentication என்பது ஜிமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஆன்லைன் வங்கிக் கணக்குகள் போன்ற அனைத்து இணைய கணக்குகளையும் உங்கள் கடவுச்சொல் மற்றும் தொலைபேசி இரண்டின் மூலமும் பாதுகாக்கும் ஒரு செயற்பாடாகும். டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செயற்படுத்தும் போது இணைய கணக்குகளிற்கு ஒரு வலுவான பாதுகாப்பு கிடைத்து விடுகிறது.


உங்கள் கடவுச்சொல்லைத் (password)  திருடுவது என்பது  நீங்கள் நினைப்பதை விட எளிதானது என்பதை அறிவீர்களா?

  • ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துதல்
2-Step Verification
  • பாதுகாப்பற்ற  இணையதளங்களிலிருந்து  மென்பொருளைப் பதிவிறக்கம் செய்தல்
  • அறியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் செய்திகளில் உள்ள இணைப்புகளைக் க்ளிக் செய்தல் போன்ற ஏதேனும் சில பொதுவான  செயற்பாடுகளில் உங்கள் கடவுச்சொல் திருடப்படும் அபாயம் உள்ளது.

உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குரிய கடவுச் சொல் ஒரு தவறான நபரின் கையில் செல்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்னவெல்லாம் நடக்கும்?

  • அவர் உங்கள் மின்னஞ்சல் கணக்கினையே முடக்கி விடலாம். 
  • உங்கள் மின்னஞ்சல்கள், தொடர்பாளர் பட்டியல், புகைப்படங்கள் போன்ற அனைத்தையும் பார்க்கலாம்.  அல்லது அவற்றை நீக்கி விட முடியும்.
  • நீங்கள் அனுப்புவது போல்  உங்கள் நண்பர்களுக்கு தேவையற்ற அல்லது தீங்கு விளைவிக்கும் மின்னஞ்சல்களை அனுப்ப முடியும்.
  • உங்கள் ஆன்லைன் வங்கிக் கணக்கு போன்ற பிற கணக்குகளுக்கான கடவுச்சொற்களை மீட்டமைக்க (reset) மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்த முடியும்
டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் என்பதை இந்தப் ப்டம் சிறப்பாக விளக்குகிறது

பெரும்பாலான இணைய பயனர்கள் தங்கள் இணைய கணக்குகளைப் பாதுகாக்க ஒரே ஒரு அடுக்கு – கொண்ட அவர்களின் கடவுச்சொல்லை மட்டுமே பயன் படுத்துகிறார்கள். ஆனால் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் வசதியை உங்கள் இணைய கனக்கிற்கு  அமைத்திருந்தால் , உங்கள் கடவுச்சொல்லை ஒரு  தவறான நபர்  அறிந்து கொண்டாலும்   உங்கள் கணக்கில் நுழைய  அவருக்கு உங்கள் தொலைபேசி அல்லது பாதுகாப்பு குறியீடு (Security Key)  அடங்கிய பென் ட்ரைவ் கூடுதலாகத் தேவைப்படும்.

அதாவது டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் முறையில் உங்கள் கடவுச்சொல்லை யாரும் அறிந்து  வைத்திருந்தாலும் தவறான நபர்களை உள்ளே நுழைய விடாமல்  அவர்களை எப்போதும்  வெளியிலேயே வைத்திருக்க முடியும்.

டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் பயன் படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழைவது சற்று வித்தியாசமாக நடை பெறும்

  • முதற்படியில்  உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்
  • இரண்டாம் படியில் வேறு ஒரு தகவலும் உங்களிடம் கேட்கப்படும். அது உங்கள் தொலைபேசிக்கு உரை(text) , குரல் அழைப்பு (voice) அல்லது மொபைல் செயலி (mobile app)  வழியாக உரிய நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட  ஒரு குறியீடாக இருக்கும்   இது கூடுதல் பாதுகாப்பு அடுக்காகத் (layer) தொழிற்படுகிறது.

உள்நுழைவு செயற்பாட்டில் குறிப்பிட்ட கணினியில் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என்பதை நீங்கள் தேர்வு செய்யவும் முடியும் அப்போதிருந்து, நீங்கள் உள்நுழையும்போது அந்தக கணினி உங்கள் கடவுச்சொல்லை மட்டுமே கேட்கும்.

ஆனால் நீங்கள் அல்லது வேறு எவரேனும் மற்றொரு கணினியிலிருந்து உங்கள் கணக்கில் உள்நுழைய முயற்சிக்கும்போது, டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் தேவைப்படும்.

உங்களுக்கு தேவைப்படும்போது சரிபார்ப்புக் குறியீடுகள் உங்கள் கணக்கிற்கென தனியாகஉருவாக்கப்படுகின்றன. அவை உரை(text) , குரல் அழைப்பு (voice) அல்லது மொபைல் செயலி (mobile app)  வழியாக உங்கள் தொலைபேசிக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு குறியீடும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

2-Step Verification for your Google Account