elgooG-The reverse of Google


elgooG-The reverse of Google கூகுல் –அனைவரும்  அறிந்த அனைவரையும் வியக்க வைக்கும் தேடற் பொறி. நாம் தேடும் அனைத்து தகவல்களையும் நொடிப் பொழுதில் அறிந்து கொள்ள  கூகுல் உதவுகிறது.  எனினும் கூகுலை முற்றிலும் வேறுபட்ட வடிவத்தில் நீங்கள் பார்த்ததுண்டா? அதாவது, எல்லா தேடல் முடிவுகளையும் சொற்களையும் வழமைக்கு மாறாக எதிர் திசையில் வலமிருந்து இடமாக்க்க காண்பிக்கிறது. எல்கூஜி எனும் elgoog.im கூகுல் போன்ற தேடற் பொறி இணைய தளம்.

elgooG எல்கூஜி (google) பின்னோக்கி உச்சரிக்கப்படுகிறது) என்பது கூகிள் தேடற் பொறியின் google.com பிரதிபலித்த விம்பமாகத் தொழிற்படும் (mirror site) ஒரு இணைய தளம்.

elgooG-The reverse of Google
lgooG-The reverse of Google

எல்கூஜி தளம் கூகிள் போன்றது ஆனால் எல்லா சொற்களும், வாக்கியங்களும் (உரைகள்-text) வலமிருந்து இடமாக காட்டப்படும்.. தேடல் பெட்டி மற்றும் தேடல் முடிவுகள் கூட எதிர்திசையில் காட்டப்படுகின்றன. இங்கு வலமிருந்து இடமாக தலைகீழாக தட்டச்சு செய்வது வேடிக்கையாக இருக்கும்.

உதாரணமாக, "“india" பற்றித் தேட விரும்பினால், நீங்கள் aidni என தேட வேண்டும்.

இது கூகுலின் பிரதி பளித்த விம்பம் போன்ற இணைய தளம் என அறியப்பட்டாலும்  இணைய உலகில் “mirror site மிர்ரர் சைட்” என்பது ஒரு இணைய தளத்தின் உள்ளடக்கத்தை நகலெடுத்து வைத்துள்ள மற்றுமொரு தளத்தைக் குறிக்கும்.

அதாவது பல பேர் பார்வையிடும் பிரபலமான இணைய தளங்கள்  web traffic - ட்ரேபிக் நெருக்கடியை சமாளிப்பதற்காக அதன் பிரதிபளித்த விம்பம் போன்ற இணைய தளங்களை வேறு சேர்வர்களில் நகல் செய்து வைத்திருப்பது வழக்கம்.

ஆனால் இந்த எல்கூஜி தளத்தை அது போன்ற விம்பமாகக் கருத முடியவில்லை. ஏனெனில் இங்கு டொமேன் பெயர்கள் ஒரே மாதிரி அமையவில்லை. மாறாக. இது google எனும் பெயரின் திரும்பிய வடிவத்தையே கொண்டுள்ளது.

இந்த எல்கூஜி “மிர்ரர் சைட் – mirror site” மிரர் (mirror) எனும் ஆங்கில வார்த்தையின் நேரடி பொருள் கொண்ட ”கண்ணாடியில் தோன்றுவதைப் பிரதிபளிப்பது போல் எழுத்துக்களைக் காண்பிக்கிறது. எனவே இதனை ஒரு வித்தியாசமான மிரர் சைட் என வைத்துக் கொள்ளலாம்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் சீன மக்கள் குடியரசில் கூகுல் தேடல் பொறி பயன் படுத்துவது   தடை செய்யப்பட்ட பின்னர் சீனாவின்  The Great Firewall of China எனும்  சீன மக்களின் இணைய பயன் பாட்டை சீரமைப்பதற்கான  அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அரணிலிலிருந்து (இது சீனப் பெருஞ் சுவர் போன்றதல்ல Firewall என்பது ஒரு இணைய பாதுகாப்பு மென்பொருளைக் குறிக்கிறது) தப்பித்து கொள்ளும் வகையில்   2002 ஆம் ஆண்டு இது ஆல் டூ பிளாட்  (alltooflat)எனும் நிறுவனத்தால் "வேடிக்கையாக" உருவாக்கப்பட்டது, பின்னர் இது  சீனாவில் பிரபலமடையத் தொடங்கியது.  

இது கூகுல் நிறுவனமே உருவாக்கியதாக  நம்பப்பட்டாலும் கூகுல் நிறுவனம் இதுவரை இதற்கு உரிமை கோரியதில்லை. விகிபீடியா கூட இதன் உரிமையளராக http://www.alltooflat.com எனும் தளத்தின் பெயரைக் காண்பிக்கிறது.

ElgooG முற்றிலும் வேறுபட்ட வலைத்தளம் என்றாலும், காட்டப்பட்ட தேடல் முடிவுகள் கூகுகிளிலிருந்து வருபவை. நீங்கள் elgooG இன் தேடல் முடிவைக் கிளிக் செய்யும் போதெல்லாம் அது உங்களை குறிப்பிட்ட இணைப்பிற்கு அழைத்துச் செல்லும்.

மன்னிக்க வேண்டும். துரதிர்ஷ்ட வசமாக இந்த  ElgooG  இணைய தளம் சில காலமாக செயற்படக்காணவில்லை. மாறாக அங்கு தரப்பட்டுள்ள சில இணைப்புகள் மட்டும் பிரவுசரில் வேடிக்கையான வித்தைகள் காட்டிக் கொண்டிருக்கின்றன.

elgoog.im