Webdriver Torso





Webdriver Torso வெப் டிரைவர் டார்சோ என்பது  யூடியூப்பில் இருக்கும் ஒரு மர்மச் சேனல்.

மொத்தம் 624,774 வீடியோக்கள்

பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 76 ஆயிரம் - 176K  சப்ஸ்க்ரைபர்கள்

அடையாள படம் இல்லை.

வீடியோ விவரணம் இல்லை

இது வரை 22,252,875 மேற்பட்ட பார்வைகள் views

இத்தனை வீடியோக்களைப் பதிவேற்ற வேண்டுமானால் தினம் ஒரு வீடியோ வீதம்  ஒரு தனி நபருக்கு 1700 வருடங்கள் செல்லும். தினம் 3 வீடியோ வீதம் அப்லோட் செய்ய  வருடங்கள்  செல்லும்.

இந்த சேனலை உருவாக்கி வீடியோ பதிவிடுவது யார்?

இந்தக் கேள்வி இந்தச் சேனல் உருவாக்கிய பின்னர் சில வருடங்கள் மர்மமாகவே இருந்தது. பின்னர் கூகுல் நிறுவனம் அது தங்களின் வேலைதான் என்பதை ஒப்புக் கொண்டது.

வெப் டிரைவர் டார்சோ என்பது யூடியூபின்   செயல்திறன் அறியும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள  தானியங்கி சோதனை சேனல்.  கூகிள்  இதனை 2013, 7 மார்ச் 7 இல் உருவாக்கியது, 

இந்தச் சேனலின் தன்மை மற்றும் அதன் சில வீடியோக்களில் இருந்த உள்ளடக்கம் பற்றிய மக்களின் சுவாரஸ்யமான  ஊகங்களுக்காக 2014 இல் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது,

அதே ஆண்டு செப்டம்பர் 23 முதல் வீடியோக்களைப் பதிவேற்றத் தொடங்கியது, இந்த வீடியோக்கள் beeps பீப் ஒலியுடன் கூடிய  ஸ்லைடுகளைக் காட்டியது.

இந்த மர்மச் சேனல் பற்றி  2014 ஆம் ஆண்டில் பொது மக்கள்  அறிந்து கொண்டனர்.  பின்னர்   இது  பார்வையாளர்களுக்கு  ஒரு பேசுபொருளாகவே  மாறியது. பலரும் பலவிதமான  யூகங்களை இந்தச் சேனல் பற்றி  நகைச் சுவையாக எடுத்துச் சொன்னார்கள்

Webdriver Torso

இந்த ச் சேனல் ஒரு உட் சோதனைப் பயன்பாடாக இருப்பதை யூடியூப் ஒப்புக் கொள்ளும் வரை இது ஒரு பிரபலமான மர்மமாகவே இருந்தது.

யூடியூப் பதிவேற்றங்கள் சிறப்பாக நடைபெறுகின்றனவா என்பதைப் பரீட்சிக்கும் நோக்கிலேயே  வெப் டிரைவர் டார்சோ உருவாக்கப்பட்டுள்ளது. .

 2017 மே 4 இல் நிலவரப்படி 624,774 வீடியோக்களுக்குப் பிறகு அதே விகிதத்தில் வீடியோக்களை பதிவேற்றுவதை சேனல் நிறுத்தியது.

Webdriver Torso