Difference between Starred messages and important messages in Gmail

ஜிமெயிலில் ஸ்டார்ட் மெஸ்ஸேஜ் / இம்போட்டண்ட் மெஸ்ஸேஜ் என்ன வேறுபாடு?



ஜிமெயில் இன்பாக்ஸில் இயல்பு நிலையில் (default) உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் செய்திகளின் முன்னே  நட்சத்திரக் குறியீடு (star mark) மற்றும் அம்புக்குறி (arrow mark) போன்ற ஒரு குறியீடும் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். (அதனை அம்புக் குறி என்றே வைத்துக் கொள்வோம்) இவ்விரு குறியீடுகளும் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை இலகுவாக ஒழுங்கு படுத்தும் நோக்கிலேயே தரப்பட்டுள்ளன. மின்னஞ்சல் சேவையை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகக் கருதப்படுகிறது.

Difference between Starred messages and  important messages in Gmail

தினமும் அதிக எண்ணிக்கையான மின்னஞ்சல்கள் வரும் நிலையில் ஒவ்வொன்றிற்கும் உடனடியாக பதில் அனுப்ப உங்களால் முடியாமலிருக்கும். அதனால் வந்திருக்கும் மெயில்களின் தலைப்பை மாத்திரம் படித்து விட்டு அவை முக்கியமானதாக நீங்கள் கருதினால் அவற்றிற்கு நட்சத்திரக் குறியீடிட்டு (star mark) வைப்பதன் மூலம் பிரிதொரு நேரத்தில் நட்சத்திரக் குறியீடுகளுடன் (Starred messages) கூடிய அந்த மெயில்களைத் தனியாக பார்வையிடவோ பதில் மெயில் அனுப்பவோ முடியும்.

Difference between Starred messages -அதே போல் ஜிமெயிலில் உங்கள் நடவடிக்கைகளை அவதானித்து உங்களுக்கு வரும் மெயில்களில் முக்கியமானவை (important messages) எனக் கருதும் மெயில்களை ஜிமேயில் சேர்வர் தானாகவே அம்புக்குறி அடையாளமிட்டு (arrow mark) வைக்கும். குறிப்பிட்ட முகவரிகளிலிருந்து வந்த செய்திகளிற்கு ஏற்கனவே நீங்கள் பல தடவை பதிலளித்திருப்பதைக் கண்டறிந்து அவற்றை முக்கிய செய்திகளாக (important messages) அடையாளமிட்டு உங்கள் வேலையை இலகுவாக்கி வைக்கிறது.

உங்களுக்கு வரும் மெயில்களை நீங்களாகவே முக்கிய செய்தியாக அடையாளமிடவோ விரும்பினால் அம்புக்குறி அடையாளத்தை  நீக்கவோ முடியும். அவ்வாறு நீக்கும் போது மறுபடி அதே மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் செய்திகளை எதிர்காலத்தில் அடையாளமிடாது.

ஜிமெயில் இன்பாக்ஸ் அமைவுகளில் (settings) இம்போட்டண்ட்  ஃபஸ்ட் (Important first) அல்லது ஸ்டார்ட் ஃபஸ்ட் (starred first) தெரிவு செய்யும்போது அம்புக்குறி அடையாளமிட்ட அல்லது நட்சத்திரக் குறியீடிட்ட செய்திகள் அனைத்தையும் தனியாகப் பார்வையிட முடிவதோடு இன்பொக்ஸ் திரையில் அவற்றை ஆரம்பத்திலும் காண்பிக்கும். அதேபோல் default தெரிவு செய்யும்போது கிடைக்கப் பெற்ற திகதி ஒழுங்கில் வழமை போன்று இயல்பு நிலையில் காண்பிக்கும்.

இவ்வாறு இன்பாக்ஸை ஒழுங்கு படுத்தும் வசதி ஜிமெயிலில் மாத்திரமன்றி அனைத்து மின்னஞ்சல் சேவைகளிலும் கிடைக்கின்றன.

Difference between Starred messages