Top 10 uses of Google Lens

Top 10 uses of Google Lens கூகுல் லென்ஸ் என்பது AI- Artificial Intelligence நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் (machine learning) தொழில் நுட்பம் இணைந்த ஒரு செயலி. இது ஸ்மார்ட்போனின் கேமராவைப் பயன் படுத்தி பொருள்களைக் கண்டறிகிறது. மேலும், பொருள்களைக் கண்டறிவதோடு மட்டுமல்லாமல் அதனடிப்படையில் வேறு செயற்பாடுகளையும் வழங்குகிறது.

கூகுல் லென்ஸ் 2017 இல் வெளியிடப்பட்டது இதனை கூகுல் போட்டோஸ் (Google Photos) மற்றும் கூகுல் உதவியாளர் (Google Assistant) வழியாகவும் அணுகலாம். மேலும், ஒரு முழுமையான லென்ஸ் செயலியையும் கூகுல் பிரத்தியேகமாக வழங்குகிறது. ப்லே ஸ்டோர் ஊடாக அதனைப் பதிவிறக்கம் செய்யலாம்.

உரையை எளிதாக நகலெடுக்கலாம் Copy Text

தொலைபேசி எண்கள், தேதிகள், மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் போன்ற நீங்கள் அவ்வப்போது காணும் நிஜ உலக விடயங்களை  உரை (text)வடிவத்தில் நகலெடுக்க கூகுல் லென்ஸ் உங்களை அனுமதிக்கிறது.

Top 10 uses of Google Lens

வணிக அட்டைகளைப் இன்றும் பல பேர் பயன்படுத்துகிறார்கள், வணிக அட்டயில் உள்ள அனைத்து தகவல்களையும்  கூகுல் லென்ஸ் உங்கள் முகவரி புத்தகத்தில் சேமிக்க உதவுகிறது. ஒரு தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைத் கூகுல் லென்ஸ் கொண்டு ஸ்கேன் செய்யும் போது  அதை என்ன செய்ய வேண்டும் என்பதை லென்ஸ் பரிந்துரைக்கும். எடுத்துக்காட்டாக, அந்த எண்னை புதிய தொடர்பாளராக சேர்க்க வேண்டுமா/ அந்த என்ணுக்குரியவரை தொலைபேசியில் அழைக்க வேண்டுமா மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமா அல்லது இணைப்பு வலைத்தளத்தைப் பார்வையிட வெண்டுமா என பல தெரிவுகளை உங்களுக்குக் காண்பிக்கும்.

ஒத்த பொருட்களை இனம் காணலாம் Find similar products

ஒத்த தயாரிப்புகளைக் எளிதில் இனம் காண கூகிள் லென்ஸ் உதவுகிறது. நீங்கள் விரும்பும் ஒரு பொருளின்  புகைப்டத்தை லென்ஸ் மூலம் ஸ்கேன் செய்ய  உடனடியாக அது போன்ற மாற்று தயாரிப்புகளை பரிந்துரைக்கும். வலைத்தள இணைப்புகளையும் (link) காண்பிக்கும் .

புத்தகங்கள் பற்றிய தகவலைப் பெறலாம்
Get info about books

புத்தகக் கடையொன்றில் நீங்கள்  வாங்க விரும்பும் புத்தகம் பற்றிய  மேலும் விவரங்களை அறிந்து கொள்ளவும் கூகிள் லென்ஸ் உதவுகிறது.

புத்தக அட்டையில் புத்தகத்தின் மீது கேமராவை சுட்டிக்காட்டவும், கூகிள் தேடலுக்கான இணைப்பு வழியாக அப்புத்தகம் பற்றிய மதிப்புரைகள் reviews மற்றும் விவரங்களைப்  பெறலாம்.

வலைத்தள இணைப்புகளைத் திறக்கலாம் Open links

நீங்கள்  டெஸ்க்டாப் கணினியில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு இணைய தளத்தை  தொடர்ந்து  உங்கள் ஸ்மார்ட்போனில் பார்க்க  விரும்புகிறீர்களா? கணினித் திரையில் இணைய தள முகவரியின் மீது  ஸ்கேன் செய்ய  உங்கள் மொபைல் சாதனத்தில் திறக்கக்கூடிய இணைப்பை கூகிள் லென்ஸ் உடனடியாக காண்பிக்கும்

சுவரொட்டிகள் மற்றும் வணிக அட்டைகள் உள்ளிட்ட எந்தவொரு அச்சு ஊடகத்திலும் கிடைக்கும் இணைப்புகளையும் கூட லென்ஸ் அடையாளம் காணும்.

உணவகங்கள் / பார்களின் மதிப்பாய்வு / மதிப்பீடுகளை பெறலாம் Access review/ratings of restaurants/bars/venues

கூகுல் லென்ஸை ஒரு கபே அல்லது உணவகத்தை நோக்கி (உள்ளே அல்லது வெளியே இருந்து) சுட்டிக்காட்டுங்கள். அது அந்த இடத்தின் மதிப்பீடுகள் / மதிப்புரைகளைக் காண்பிக்கும். எனவே நீங்கள் அந்த ரெஸ்டாரண்டில் தங்க வேண்டுமா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாதபோது, ​​லென்ஸ் உங்களுக்கு உதவ முன் வருகிறது.

தாவரங்களையும் விலங்குகளையும் இனம் காணலாம் Identify plants and animals

கூகுல் லென்ஸ் ஒரு வினோதமான கருவி. நீங்கள் இயற்கையை  ரசிப்பவராக  இருந்தால் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப்  படம் பிடிக்கும் போது  லென்ஸ்  உங்களுக்கு  அவற்றை இனம் காண உதவுகிறது. மேலும் தாவரங்களின்   அல்லது உயிரினங்களின் படங்களில் கேமராவை சுட்டிக்காட்டும் போதும், அதே விளைவைப் பெற முடியும்.

பாடலை / இசைக் குழுவினரை கண்டறியலாம் Discover music

 சில பழைய பாடல்கள் அடங்கிய  ரிக்காட்டுகள்  அல்லது கேசட்டுகள் உங்கள் கைகளில் கிடைக்கின்றன. ஆனால் ரெக்கார்டில் கேசட்டில் இருக்கும் இசை குழுவினரையோ குழுவின் பெயரையோ அடையாளம் காண முடியவில்லையா? அட்டையின் படம் பிடித்து, லென்ஸ் மூலம் ஸ்கேன் செய்ய  உடனடியாக அது எந்த இசைக் குழு போன்ற தகவல்களை வழங்கும்.

QR குறியீடுகளை ஸ்கேன் செய்யலாம் Scan QR Codes

நீங்கள் எங்காவது ஒரு QR குறியீட்டைக் காணும் போது அது என்ன தகவல்களைக் கொண்டிருக்கிறது என்பதை அறிய வேண்டுமா? சரி, உங்கள் தொலைபேசியை எடுத்து கூகுல் லென்ஸை ஸ்கேன் செய்ய உடனடியாக அது QR  குறியீட்டிலுள்ள தகவல்களைக் காண்பிக்கும்.

காலண்டரில் ஒரு நிகழ்வைச் சேர்க்கலாம் Add events to your calendar

நீங்கள் ஒரு நகரத்தில்  உலாவும்போது ஒரு நிகழ்வு பற்றிய சுவரொட்டியைக் காண்கிறீர்கள். அதனை லென்ஸ் மூலம் சுட்டிக்காட்டி,  அந்த நிகழ்வு நடக்கும் தினத்தை  காலெண்டரில் எளிதாக சேர்க்கலாம். மேலும் நிகழ்வுக்குரிய வலைத்தளத்தையும் காண்பிக்கும். நிகழ்வு நடை பெறும் இடத்தையும் வரைபடத்தில் பார்க்கலாம். நிகழ்வு அமைப்பாளரைப் பற்றி மேலும் அறியவும் கூட கூகுல் லென்ஸ் உதவுகிறது.

பெயர்ப் பலகைகளை மொழிபெயர்க்கலாம் Translate signs

மொழி தெரியாத ஒரு வெளிநாட்டில் பயணம் செய்கிறீர்கள். அங்கு நீங்கள் காணும் பெயர்ப் பலகைகள், பாதை குறியீடுகளைப் எளிதாகப் புரிந்து கொள்ள மொழிபெயர்க்கவும் கூகுல் லென்ஸ் உதவுகிறது. ஒரு பெயர்ப் பலகையை படம் பிடித்து, அதன் மொழிபெயர்ப்பைக் காண Translate பட்டனில் தட்டினால் போதும்.

கூகுல் லென்ஸின் மேலுள்ள பத்து பயன் பாடுகளையும் சலிக்காமல் படித்த உங்களுக்கு பதினொன்னாவதாக (பதினொன்றாவதாக ) இலவச இணைப்பாக லென்ஸின் மற்றுமொரு பயன்பாடு பற்றி வீடியோ வடிவில் தருகிறேன். வீடியோ பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.



Google lense App Link