What is Android Nearby Share?

What is Android Nearby Share? What is Android Nearby Share? Apple நிறுவன iphone களில் AirDrop எனும் வசதி இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதன் மூலம் வேறு ஐ-ஃபோன்களிடையே இலகுவாக கோப்புக்களைப் பரிமாற முடியும். அதற்கு நிகரான ஒரு அம்சத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் Nearby Share (அருகில் பகிர்) எனும் பெயரில் அண்ட்ராய்டு சாதனங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த வசதி மூலம் பிற Android பயனர்களுடன் கோப்புக்களை எளிதாகப் பகிர அனுமதிக்கிறது. இந்த Nearby Share தற்போது எல்லா அண்ட்ராய்டு தொலைபேசிகளிலும் கிடைக்கிறது.
Android Nearby Share

நீங்கள் ஏற்கனவே ஐஃபோன் AirDrop சேவையைப் பயன்படுத்தியிருந்தால், Nearby Share பற்றி உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. எனினும் அதனை இதுவரை  பயன் படுத்தாதவர்களுக்காக இந்த விளக்கம்.

Nearby Share என்பது அருகிலுள்ள சாதனங்களுக்கு இடையில் கோப்புகளை அனுப்பவும் பெறவும் கூடிய வசதியை வழங்குகிறது.  எனினும் இங்கு அனுப்புநரும் பெறுநரும் ஒரே அறையில் அருகருகே இருக்க வேண்டும். அதாவது சாதனங்களையும் நெருக்கமாக வைத்திருக்க வேண்டும். எனினும் வேறு நாட்டிலோ நகரத்திலோ இருக்கும் தொலைதூர நபர்களுக்கு கோப்புகளை அனுப்ப Nearby Share பயன்படுத்த முடியாது.

சாதனங்களுக்கு இடையில் இணைப்புகள், கோப்புகள், புகைப்படங்கள் போன்றவற்றை எளிதாக அனுப்ப அனுமதிக்கும் ஏராளமான மூன்றம் தரப்பு  செயலிகளை Google Play Store வழங்குகிறது. இருப்பினும், எல்லா அண்ட்ராய்டு சாதனங்களுக்கும் பொதுவான  அண்ட்ராயிடின் ஒரு  சொந்த உள்ளமைக்கப்பட்ட வசதி இதுவரை இருந்ததில்லை.

Nearby Share அண்ட்ராயிடுக்குப் புதியவர்கள் கூட பயன்படுத்தக்கூடிய, எளிமையான பயனர் நட்பு இடைமுகத்தை வழங்குகிறது.  

கோப்புக்கள் எனும் போது புகைப்படங்கள், வீடியோக்கள், PDF ஆவணங்கள், இணைப்புகள், APK ஃபைல்கள், தொடர்பாளர் பட்டியல் (contacts) போன்ற அனைத்து வகையான தரவுகளையும் நீங்கள் பகிரலாம். கோப்புகள் பதிவிறக்க கோப்புறையில் (download folder) சேமிக்கப்படும்.

Nearby Share மூலம் கோப்புக்களைப் பரிமாற புளூடூத், வைஃபை அல்லது என்எப்சி (NFC)  தொழிநுட்பங்களைப் பயன்படுத்துகிறது. கோப்பு மாற்றும் பணி ஆரம்பிக்கும்போது நிலைமைக்கு எற்ப எந்த  முறை சிறந்தது என்பதை அண்ட்ராயிட் சாதனம் தானாகவே தீர்மானிக்கிறது. அளவில் பெரிய கோப்புகள் அனுப்பும் போது வைஃபை நேரடி (Wifi Direct) இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளும், அதே நேரத்தில் சிறிய கோப்புக்களை புளூடூத் அல்லது என்எப்சி வழியாக அனுப்பும். கோப்பு பகிர்வின் போது முழுமையாக மொபைல் டேட்டாவை அல்லது இணைய இணை ப்பை முடக்கவோ (off) அல்லது இயக்கவோ (on) முடியும்.

Nearby Share ஐப் பயன்படுத்த வேண்டுமாயின், உங்கள் அண்ட்ராயிட் ஃபோன்  அருகிலுள்ள மற்றுமொரு அண்ட்ராயிட் சாதனத்தைக்  கண்டறிய  வேண்டும். அதனால் இரண்டு சாதங்களிலும்  திரை பூட்டிடாமல் திறக்கப்பட்டிருக்க வேண்டும்.  (screen unlocked) மேலும் புளூடூத் மற்றும் இருப்பிட (location services) சேவைகளை இயக்க நிலையில் இருக்க வேண்டும். அவைமுடக்கப்பட்டிருந்தால் அவற்றை இயக்க Android உங்களிடம் கேட்கும். கோப்பு பகிர்வின்போது அனுப்புநருக்குத் தெரியும்படியாக,  அனுப்ப்படும் சாதனத்தில்  ஓர் அறிவிப்பு தோன்றும். அனுப்புநர் (sender) பெறுநர் சாதனத்தைத் (receiver) தேர்ந்தெடுத்து கோப்புக்களை அனுப்புவார்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, பெறுநர் ஒவ்வொரு முறையும் கோப்பு பரிமாற்றத்தை அனுமதிக்க வேண்டும். உங்கள் அனுமதியின்றி நீங்கள் ஒருபோதும் எந்தவொரு கோப்பையும்  பெற மாட்டீர்கள் என்பதே இதன் பொருள்.

உங்கள் Google Play Services புதுப்பிக்கப்பட்டால், Nearby Share வசதி தானாகவே உங்கள் Android சாதனத்தில் வந்து விடும். இந்த அம்சத்தைப் பெற்றதும் Share மெனுவின் கீழ் அதைக் காண்பீர்கள். அதாவது, எந்த கோப்பிலும் Share பட்டணை அழுத்தினால், வரும் மெனுவில் Nearby Share தெரிவைக் காண்பீர்கள்.

Android Central