Whatsapp delays implementing its privacy policy

Whatsapp delays implementing its privacy policy ஃபேஸ்புக் உடன் தரவைப் பகிர பயனர்களை கட்டாயப்படுத்தும் புதிய தனியுரிமைக் கொள்கையை செயல்படுத்துவதை வாட்சப் இப்போது தாமதப்படுத்துகிறது. புதிய கொள்கையைப் பற்றி அதிகமான "குழப்பங்கள்-confusion" மற்றும் "தவறான தகவல்கள்-misinformation ” இருப்பதாக வாட்சப் நிர்வாகம் நம்புகிறது. அதனால் இந்த புதுப்பிப்பை மே 15 ஆம் தேதி வரை தள்ளி வைக்கிறது.

ஜனவரி 2021 இன் தொடக்கத்தில், வாட்சப் ஒரு புதிய தனியுரிமைக் கொள்கையை வெளியிட்டது. இது பயனர்களை ஃபேஸ்புக் உடன் தரவைப் பகிர கட்டாயப்படுத்துகிறது. பிப்ரவரி 8, 2021 க்குள் புதிய விதிமுறைகளுக்கு நீங்கள் உடன்படவில்லை என்றால், வாட்சப் உங்கள் கணக்கை நீக்கும் என்றும் கொள்கை கூறியது.

Whatsapp delays implementing its privacy policy

இந்த புதுப்பிப்பு பற்றிய அறிவிப்பினால் வாட்சப் குறிப்பிடத்தக்க பின்னடைவை சந்தித்தது. பயனர்கள் ஃபேஸ்புக்கோடு தரவைப் பகிர வேண்டிய கட்டாயத்தில் இருக்க விரும்பவில்லை. இது பயனரை வாட்சப்பில் இருந்து சிக்னல், டெலிகிராம் போன்ற பிற உடனடி செய்திச் சேவை மாற்றுகளுக்கு பெருமளவில் இடம்பெயரத் தூண்டியது.

இந்த எதிர்வினையைப் பார்த்த பிறகு, வாட்சப் அதன் வெளியீட்டை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது.  வாட்சப் ப்லாக்கில்  ஒரு பதிவை இட்டுள்ள வாட்சப் நிர்வாகம், புதிய புதுப்பிப்பைப் பற்றி "தவறான தகவல்கள் நிறையவே உள்ளன" எனக்  குறிப்பிட்டுள்ளது. .

உண்மையில் வாட்சப் சேவை தனியுரிமையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும், புதிய கொள்கையுடன் "அது எதுவும் மாறவில்லை" என்றும் வாட்சப் கூறுகிறது. வாட்சப் அதன் மதிப்பை இன்னும் நிலைநிறுத்தும் என்று அது விளக்கமளிக்கிறது.

வாட்சப்பின் புதிய கொள்கையால் எழுப்பப்பட்ட பல கேள்விகள் காரணமாக, தளம் அதன் செயல்பாட்டை தாமதப்படுத்துகிறது. இந்தக் கொள்கை குறித்து மேலதிக விளக்கங்களை வழங்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது, மேலும் பிப்ரவரி 8 ஆம் தேதி பயனர்களின் கணக்குகளை நீக்கவோ அல்லது நிறுத்தவோ மாட்டாது என என்று உறுதியளிக்கிறது.

பதிலாக, இது படிப்படியாக "வாட்சப்பில் புதிய வணிக தெரிவுகள் மே 15 அன்று அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் தங்கள் சொந்த வேகத்தில்" கொள்கையை மறு பரிசீலனை   செய்வதை நோக்கி பயனர்களைத் தூண்டும்.

இந்த கொள்கை மாற்றத்தைப் பற்றி சிந்திக்க பயனர்களுக்கு வாட்சப் அதிக காலம்  வழங்கியுள்ளது என்றாலும், வாட்சப் இன்னும் அதன் கொள்கையை மாற்றவில்லை என்பது தெளிவு. இதன் பொருள் என்னவென்றால், பேஸ்புக் உடனான தரவு பகிர்வு வாட்சப் பயன்பாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கும், இது வணிகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட.

இதே செய்தி கோராவில்