Time limit to delete WhatsApp messages has increased



WhatsApp அதன் பயனர்களுக்கு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தேவையற்ற செய்திகள் அல்லது தவறுதலாக அனுப்பப்பட்ட செய்திகளை நீக்கும் திறன் அத்தகைய ஒரு அம்சமாகும். இது வரை, ​​பயனர்கள் அத்தகைய செய்திகளை 68 நிமிடங்களுக்குள் நீக்க முடியுமமாக இருந்தது.

இப்போது இந்த நேர வரம்பை 2 நாட்களுக்கு மேல் அதிகரித்துள்ளது Meta நிறுவனம்.

அதாவது , WhatsApp பயனர்கள் தங்கள் செய்திகளை நீக்க 2 நாட்கள் மற்றும் 12 மணிநேரமாக அதிகரித்துள்ளது (மொத்தம் 60 மணி நேரம்) .

பயனர்கள் தங்களுக்கான செய்தியை (Delete Messages) நீக்கலாம் அல்லது அனைவருக்கும் செய்திகளை நீக்குமாறு (Delete messages for everyone) கோரலாம்.

அனைவருக்கும் செய்திகளை நீக்குவது ஒரு தனி நபர் அல்லது குழு அரட்டைக்கு அனுப்பிய குறிப்பிட்ட செய்திகளை அனைவரின் சாதனங்களிலிருந்தும் நீக்க அனுமதிக்கிறது.

உங்களுக்காக செய்திகளை நீக்கும் போது, ​​(Delete Messages) பயனரின் சாதனத்தில் இருந்து மட்டுமே அவற்றை நீக்குகிறது.

இது உங்கள் பெறுநர்களின் அரட்டைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

உங்கள் பெறுநர்கள் தங்கள் அரட்டைத் திரையில் செய்திகளைப் பார்ப்பார்கள்.