What is QR code?

QR Code என்றால் என்ன?

Bar Code தொழில் நுட்பம் போன்ற மற்றுமொரு தொழில் நுட்பமே  QR CodeQuick Response என்பதன் சுருக்கத்தையே QR குறிக்கின்றது. இத் தொழில் நுட்பம் ஜப்பானில் பரவலாகப் பயன் பாட்டிலுள்ளது  QR Code  தொழில் நுட்பத்தில் ஒரு படத்தினுள்  தகவல்கள் மறைக் குறியாக்கம் (encode) செய்ய்யப் படுகின்றன.   

இந்த QR Code இல் இணையதள முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கங்கள் மற்றும் குறுஞ் செய்திகள் போன்றவறை மறைக்குறியாக்கம் செய்யலாம்.

மறைக் குறியாக்கம் செய்யப் பட்ட தகவல்களைக் கொண்ட இப்படத்தினை இனையம் வழியே பகிரலாம். அல்லது அதனை அச்சிட்டு வன் பிரதியாக வும் பயன் படுத்தலாம்.

QR கோடை உருவாக்குவதற்கென  மென்பொருள்களும்  உள்ளன. அவற்றை இலவசமாகவே இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் மென்பொருள்கள் எதனையும் கணினியில் நிறுவாமலேயே ஓன்லைனிலும் QR  கோடை உருவாக்கும் வசதியை பல இனைய தளங்கள் வழங்கிகின்றன. அவற்றின் மூலம்  இலகுவாக உங்கள் விருப்பத்திற்கேட்ப QR Code படங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

சரி. உருவாகிய
QR கோடினுள் அடங்கியிருக்கும் தகவல்களைக் ஒருவர் கண்டறிவது (decode)  எப்படி?  அதற்கும் ஏராளமான மென்பொருள் உள்ளன. அல்லது ஓன்லைன் சேவைகளையும் பயன் படுத்தலாம்.

நீங்கள் ஸ்மாட் போன் பயன் படுத்துபவராயிருந்தால் உங்கள் வேலை மிக இலகுவாகிடும். ஐபோன், அன்ட்ரொயிட் பொன்ற ஸ்மாட் கருவிகள்  மூலம் QR கோட் உருவாக்குதல்,  அதனை இனையத்தில் பகிர்தல் கண்டறிதல் போன்ற பணிகளை மிக இலகுவாகக் கையாள முடியும். .

ஐபோன் மற்றும் அன்ட்ரொயிட் கருவிகளுக்கான QR அப்லிகேசனை நிறுவிக் கொள்வதன் மூலம் QR கோட் ஒன்றைப் படிக்கும் போது  அந்தக் கோடிலுள்ள ஒரு தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, இணைய தள முகவரி போன்றவறை காண்பிப்பது  மட்டுமல்லாம. மேற் குறித்த பயன் பாடுகளுக்குரிய அப்லிகேசன்களையும் இயக்கி விடும். அதாவது ஒரு QR கோடினுள் இணைய தள முகவரி இருக்குமானால அதனைக் காண்பிப்பதோடு அதன் மீது விரலால் தொடும் போது பிரவுசரை இயக்கி அந்த தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். ஸ்மாட் கருவியில் பொருத்தியுள்ள கேமரா QR கோட் ஸ்கேனராகப் பயன் படும்.

மேலும் நீங்கள் எங்காவது பயனிக்கும் போது, ஒரு புத்தகம, சஞ்சிகை, அல்லது ஏதேனும் ஒரு பொருளில் அச்சிடப் படிருக்கும் QR கோடுகளை ஸ்மாட் கருவி கொண்டு ஸ்கேன் செய்து உடனடியாக அவ்விடத்தி லிருந்தே அப்பொருள் பற்றிய மேலதிக விவரங்களை உரிய நிறுவனத்தோடு தொடர்பை ஏற்படுத்தி அறிந்து கொள்ளவும் முடியும். .

அதாவது இனைய தள முகவரி, மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை  டைப் செய்யாமாலேயே தொலைபேசி இலக்கத்தை டயல் செய்யாமாலேயே தொடர்பை ஏற்படுத்தலாம்.

நீங்கள் ஸ்மாட் போன் வைத்திருந்தால இப்பக்கத்தில் ப்ரசுரிக்கப் பட்டுள்ள QR Code   ஐ ஒரு முறை ஸ்கேன் செய்து பாருங்கள்.  

-அனூப்-