How to do Private Browsing?

பிரைவேட் பிரவுசிங் வேண்டுமா?

நாம் பார்வையிடும் அனைத்து இணைய தளங்களைப் பற்றிய விவரங்கள் நம் பிரவுசரில் பதியப்படும்.  நாம் முன்னர் பார்வையிட்ட இணைய தளங்களின் பெயர்களை ஹிஸ்ட்ரி பட்டியலில் பார்க்கலாம். நாம் இனைய பயன் பாட்டின் போது வழங்கும் பயனர் பெயர்கள், பாஸ்வர்ட்கள் மற்றும் படிவங்கள நிரப்பபப் படும்போது வழங்கும் விவரங்கள் போன்றன குக்கீ எனும் பைல்களாக எமது கணினியிலேயே சேமிக்கப் பட்டு விடும். கூகில் போன்ற தேடு பொறிகளைப் பயன் படுத்தி நாம் தேடும் தகவல்கள் கூட பதிவாகி  விடுகின்றன, இவ்வாறு எமது இணைய செயற்பாடுகள் அனைத்தும் எமது சொந்தக் கணினியிலே பதிவாகி விட்டால் எமக்கொன்றும் பெரிகாக பாதிப்புகள் ஏற்படாது. எனினும் இணைய மையம் போன்ற பொது இடங்களிலுள்ள பலரும் பயன் படுத்தும் கணினிகளில் மேற் சொன்ன தகவல்களனைத்தும் பதிவாகி விட்டால் எமது அந்தரங்க விடயங்கள் பகிரங்கமாவதுடன் அது பல தீய விளைவுகளையும் உருவாக்கி விடும். எனவே பொது இடங்களிலுள்ள கணினிகளில் இணையத்தைப் பயன் படுத்துவதற்கான விசேட வசதியை தற்போதுள்ள அனைத்து பிரவுசர்களும் வழங்குகின்றன. அந்த வசதியையே பிரைவேட் பிரவுஸிங் எனப்படுகிறது. இந்த பிரைவேட் பிரவுசிங்கில் குக்கிகள் எதுவும் பதியப்பட மாட்டாது. அதே போன்று நாம் பார்த்த தளங்களை மற்றவர்கள் கண்டறியவும் முடியாது. இந்த பிரைவேட் பிரவுஸிங் வசதியைப் பயன் படுத்தி பொது இடங்களிலுள்ள கணினிகளில் நிம்மதியாக இணையத்தில் உலாவலாம். நமது இணய பயன் பாட்டில் எந்த தடயத்தையும் அடுத்தவர்களால் கண்டறிய முடியாது.

கூகில் க்ரோமில் பிரைவேட் பிரவுஸிங் செய்வதற்கு incognito. விண்டோவினுள் நுளைய வெண்டும், அதற்கு குரோம் பிரவுசர் விண்டோவின் வலது பக்க மூலையிலுள்ள பட்டனில் க்ளிக் செய்து வரும் மெனுவில் New incognito Window என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது ஒரு புதிய விண்டோ தோன்றும். 


பயர்பொக்ஸ் பிரவுஸரில் பிரைவேட் பிரவுசிங் செய்ய பைல் மெனுவில் New Private Window என்பதைத் தெரிவு செய்யுங்கள். இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் புதிய பதிப்பில்  பிரவேட் பிரவுஸிங் செய்வதற்கு tools மெனுவில் InPrivate Window என்பதைத் தெரிவு செய்யுங்கள். 

-அனூப்-