Difference between Kbps and Mbps

Kbps / Mbps என்ன வேறுபாடு?

Kbps / Mbps என்பன ஒரு கணினி  வலையமைப்பில் அல்லது இணையத்தில் தரவுப் செலுத்துகை வேகத்தை  அளவிடவே பயன் படுகின்றன. Kilobits Per Second என்பதன் சுருக்கமே Kbps. அதாவது ஒரு வினாடியில் எததனை கிலோ பிட் டேட்டா பரிமாறுகிறது என்பதைக் குறிக்கிறது. ஒரு கிலோ பிட் என்பது ஆயிரம் பிட்களுக்குச் சமமானது இதனைக் Kilobytes per second  எனும் அளவீட்டுடன் குழப்பி விடாதீர்கள்..முன்னர் பயன் பாட்டில் இருந்த டயல்-அப் மோடமின் வேகம் Kbps.  எனும் அளவீட்டிலேயே குறிப்பிடப்பட்டது.

அதே போன்று. Megabits Per Second என்பதன் சுருக்கமே Mbps. ஒரு மெகா பிட் என்பது ஒரு மில்லியன் (10 இலட்சம்) பிட்களுக்குச் சமமானது. மெகாபிட் என்பது மெகா பைட் எனும் வார்த்தை போன்று ஒலித்தாலும் இரண்டும் ஒன்றல்ல. மெகா பிட் என்பது மெகா பைட்டின் எட்டில் ஒரு பகுதியையே அண்ணளவாகக் குறிக்கிறது. (ஒரு பைட்டில் 8 பிட்டுக்கள் அடங்கியுள்ளன) தற்போதைய அதி வேக இணைய இணைப்பு Mbps அளவீட்டில் குறிப்பிடப்படுகிறது.

-அனூப்-