How to disable Video autoplay in Facebook?

பேஸ்புக்கில் வீடியோ ஓட்டோப்லே ஆவதை  நிறுத்துவதற்கு..

பேஸ்புக் தளத்தில் வீடியோ பதிவுகள் அனைத்தும் தாமாகவே இயங்கும் (Auto-play) வசதியை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது நீங்கள் அறிந்ததே. இந்த வசதியானது நாம் பார்க்க விரும்பாத வீடியோக்களையும்  இயக்கிவிடுவதனால் பலரும் இந்த ஓட்டோப்லே வசதியை விரும்புவதில்லைஎனினும் இதனை செயற்படாமல் வைக்கக் கூடிய வசதியையும் பேஸ்புக் தளத்தில் தரப்பட்டுள்ளது.


உங்கள் கணினியில் ஒட்டோப்லேயை நிறுத்து வதற்கு முதலில் ப்ரவுஸரைத் திறந்து பேஸ்புக் தளத்தில் நுளையுங்கள். அங்கு வலது ஓரத்திலுள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் க்ளிக் செய்து வரும் மெனுவில் Settings தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் செட்டிங்ஸ் பக்கத்தின் இடப் புறம் உள்ள வீடியோ எனும் பட்டனில் க்ளிக் செய்து Video setting பக்கத்திற்குச் செல்லுங்கள். அங்கு Auto-Play Videos என்பதை Off நிலைக்கு மாற்றி விடுங்கள். ஆனால் இந்த மாற்றம் உங்கள் கணினியிலுள்ள பிரவுஸ ருக்கு மட்டுமே செல்லுபடியாகும். கையடக் கக் கருவிகளிலும் நீங்கள் பேஸ்புக் பயன் படுத்துபவராயிருந்தால் அக்கருவிகளிலும் வீடியோ ஓட்டோ ப்லே வசதியை நிறுத்த வேண்டும். என்ரொயிட் கருவியில் ஓட்டோப்லேயை நிறுத்துவதற்கு பேஸ்புக் எப்லிகேசனைத் திறந்து மெனு பட்டனில் தட்டி செட்டிங்ஸ் தெரிவு செய்யுங்கள். அங்கு Video Auto-Play என்பதை Off நிலைக்கு மாற்றி விடுங்கள்

அனூப்