mail.com
mail.com போனதுண்டா?
மின்னஞ்சல் எனும் போது யாஹூ ஜி-மெயில், ஹொட்மெயில் போன்ற பிரபலமான மின்னஞ்சல் சேவை தரும் நிறுவனங்களின்
பெயர்களையே நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். இத்தளங்களில் நீங்கள் விரும்பும் பயனர்
பெயரோடு மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் டொமேன் (Domain) பெயரை
நீங்கள் பெயரை மாற்ற முடியாது. உதாரணமாக ஜிமெயில் தளத்தில் ரவி உருவாக்கிய மின்னஞ்சல்
முகவரி ravi@gmail.com எனவே அமையும். ஆனால நீங்கள் விரும்பிய பெயருடன் டொமேன் பெயரையும்
மாற்றி மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கக் கூடிய
வசதியைத் தருகிறது mail.com எனும் இணைய தளம். இங்கு மின்னஞ்சல்ல் முகவரி ஒன்றை உருவாக்கும் போது நூறுக்கும்
மேற்பட்ட ஏராளமான டொமேன் பெயர்களைப் பட்டியலிடுகிறது mail.com எனும் இணைய தளம். -அனூப்-
Post Comment