SpeakIt - Extension
SpeakIt இணைய தளங்களைப் படிக்கும் ஒரு நீட்சி
நீங்கள் ஒரு
இணைய தளத்தில் செய்தியொன்றை வாசிக்கிறீர்கள்.
எனினும் அதனை முழுமையாக வாசித்து முடிக்கும் அளவிற்கு உங்களுக்கு
நேரமில்லை. கணினியில் இன்னும் வேறு வேலைகள் உங்களுக்கிருக்கின்றன. கூகில் க்ரோம் இணைய
உலாவியில் SpeakIt எனும் நீட்சியை (Extension) நிறுவிக் கொள்வதன் மூலம் இணைய
தளத்தில் விரும்பிய பகுதியைத் தெரிவு செய்து வாசிக்க வைத்து அதனைக் கேட்டுக்
கொண்டே நீங்கள் வேறு வேலைகளில் ஈடுபடலாம்.
கூகில் க்ரோமிற்கென உருவாக்கப் பட்டிருக்கும் இதனை க்ரோம் வெப் ஸ்டோரிலிருந்து
நிறுவிக் கொள்ளலாம். இதனை நிறுவிய பின்னர் இணைய தளமொன்றில் வாசிக்க வேண்டிய
பகுதியத் தெரிவு செய்து அதன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் SpeakIt தெரிவு செய்தல் வேண்டும்.
Post Comment