WinEject


CD  / DVD Drive உள்ள பட்டனைப் பயன் படுத்தாமல் சிடியை  வெளித்தள்ளவும் (eject) உட்செலுத்தவும் ( முடியும். சில வேளைகளில் CD/DVD Drive ல் இடும் சிடியை வெளியே எடுக்க முடியாதபடி சிக்கிக் கொள்ளும்.  இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு சூசியை நுழைத்து சிடியை வெளியே எடுத்த அனுபவம் உங்களுக்கிருக்கலாம். இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. வின் இஜெக்ட் (WinEject)  எனும் சிறிய யூடிலிட்டியை நிறுவிக் கொள்வதன் மூலம் சிடியை சிடி ட்ரைவிலுள்ள பட்டனைப் பயன் படுத்தாமல்  வெளித்தள்ளவும் உட்செலுத்தவும் முடியும். இதனைக் கணினியில் நிறுவியதும் டாஸ்க் பாரின் சிஸ்டம் ட்ரே பகுதியில் ஒரு ஐக்கன் வந்து அமர்ந்து கொள்ளும். அதன் மீது க்லிக் செய்து சிடியை வெளித்தள்ளவோ மூடவோ முடியும். http://www.wineject.com/ - அனூப்