Hermit – Android App

Hermit – Android App


பொதுவாக எண்ட்ரொயிட் கருவிகளுக்கான செயலிகள் நீங்கள் பயன் படுத்தாதபோதும் பின்னணியில் அவை இயங்கிக் கொண்டிருக்கும். உதாரணமாக பேஸ்புக், ஜிமெயில், வைபர் போன்ற செயலிகள் பின்னணியில் எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பதனால் அண்ட்ரொரொயிட் கருவி பேட்டரியின் மின் சக்தியை அவை விழுங்கி விடுவ்தோடு இயங்கும் வேகத்தையும் குறைத்து விடுகிறது. இதனால் நீங்கள் அடிக்கடி கருவியை சார்ஜ் செய்ய நேரிடும். . இதற்குத் தீர்வாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது  ஹேர்மிட் எனும் இந்த எண்ட்ரொயிட் செயலி. இது க்ரோம், பயபொக்ஸ் போன்ற பிரவுஸர் என்று கூடச் சொல்லலாம். இச்செயலி நாம் பார்வையிட விரும்பும் ஓர் இணைய தளத்தை செயலியாக மாற்றி அதன் ஐக்கானை ஹோம் ஸ்க்ரீனில் நிறுத்தி விடுகிறது.