How to enable Right clicking on Websites that have blocked right clicking

 இணைய தளங்களில் ரைட்-க்ளிக் தடையை நீக்குவது எப்படி?

right clickநாம் பார்வையிடும் சில இணைய தளகங்களில் மவுஸினால்  ”ரைட் க்ளிக்” செய்யும் வசதி இணைய தள உருவாக்குனர்களினால் தடுக்கப்பட்டிருக்கும். அதாவது அவ்வாறு தடுக்கப்பட்ட இணைய பக்கங்களின் மீது ”ரைட்-க்ளிக்” செய்யும் போது வழமையாக தோன்றும் ’மெனு’ தோன்றாது. இணைய தளங்களிலுள்ள ஆக்கங்களை அனுமதியின்றி பிரதி செய்வதனைத் தடுப்பதற்காகவும் இணைய தளத்தின்  பாதுகாப்புக் கருதியும் இவ்வாறு ரைட் க்ளிக் செய்யும் வசதி முடக்கப்படுவதுண்டு, எனினும் ரைட்-க்ளிக் செய்யும் வசதியை இல்லாமல் செய்வதனால் இணைய பயனர்கள் ரைட்-க்ளிக் மெனுவில் கிடைக்கும் மேலும்  பல வசதிகளை இழக்க நேரிடும். பொதுவாக சாதாரண இணைய பயனருக்கு ரைட் க்ளிக் செய்யும் வசதி அவசியப்படாவில்லாலும்  சில வேலைகளில் அந்த வசதி  தேவைப்படுவது முண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சில உபாயங்களைப் பயன்படுத்துவதன்  மூலம் ரைட்-க்ளிக்கை மறுபடி செயற்படுத்தவும் முடியும்.

பிரவுசரில் சிறிய மாரத்தைச் செயற்படுத்துவதன் மூலமோ அல்லது பிரவுஸருக்குரிய நீட்சிய நிறுவுதன் மூலமோ ரைட் க்ளிக்கை தடையை மிக இலகுவாக நீக்க முடியும். முடியும்.

இணைய உலாவிகளில் (பிரவுசரில்) ரைட் க்ளிக்கைத் தடுப்பதற்காக java script எனும் பின்னணியில் இயங்கும் ஒரு விசேட குறிமுறை பயன் படுத்தப்படுகிறது. அதனை இயங்காமல் செய்வதன்  மூலம் ரைட்-க்ளிக்கை மறுபடி இயங்கவைக்கலாம். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

Chrome  பிரவுசரில்

வலது பக்க மேல் மூலையில் உள்ள  மெனு  பட்டனில் க்ளிக் செய்து  Settings  தெரிவு செய்யுங்கள். அங்கு Show Advanced Settings  க்ளிக் செய்து Privacy எனும் பகுதியின் கீழுள்ள Content settings  எனும் பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அங்கு  Do not allow any sites to run javascript என்பதைத் தெரிவு செய்து மாற்றத்தை சேமியுங்கள்.

Firefox – இல்

firefoxமுகவரி பட்டையில் about:config என டைப் செய்து எண்டர் விசையை அழுத்துங்கள். அப்போது ஒரு எச்சரிக்கைச் செய்தி தோன்றும். அங்கு I accept the risk என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது திரையில் தோன்றும் நீண்ட பட்டியலுடன் கூடிய தேடற் பெட்டியில் javascript என டைப் செய்து எண்டர் விசையை அழுத்துங்கள். அப்போது தோன்றும் பட்டியலில் javascript.enabled என்பதைத் தெரிவு செய்து அதன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் toggle என்பதைத் தெரிவு செய்யுங்கள்.

ரைட்-க்லிக்கை செயற்படுத்துவதற்குரிய இரண்டாவது வழிமுறை அதற்குரிய பிரவுஸர் நீட்சியை  (Browser Extension) டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்வதாகும். ரைட்டு கொப்பி (RightToCopy) Extension க்ரோம் பிரவுஸருக்கென வெப்ஸ்டோரில் கிடைக்கிறது.