கூகுலின் புதியஅறிமுகம் - கம்பியூட்டரிலிருந்து SMS அனுப்பலாம்


அண்ட்ராய்ட்  பயனர்கள் SMS மற்றும் MMS போன்ற குறுந்தகவல்களை கணினியிலிருந்து அனுப்புவதற்கா Pushbullet, MightyText, Airdroid போன்ற  மூன்றாம் தரப்புசெயலிகளையே இதுவரைகாலமும் பயன் படுத்திவந்தாரகள் ஆனால் கடந்த மாதம் கூகுல் நிறுவனம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவென Messages for Web எனும் சேவையை அண்ட்ராயிட் கருவிகளுக்கென அறிமுகப்படுத்தியுள்ளது.


Messages for web என்பது குறுந்தகவல்களை நேரடியாக கணினியிலிருந்தே அனுப்புவதற்கான வசதியை வழங்குகிறது. இந்த வசதியைப் பெற உங்கள் அண்ட்ராயிட் கருவியில் MESSAGES FOR WEB எனும் செயலியை நிறுவியிருத்தல் வெண்டும். நீங்கள் வேறு செயலிகளை நிறுவியிருந்தாலும் அண்ட்ராயிட் Messages செயலியை இயல்பு நிலையில் (default messaging app) வைத்திருக்கவேண்டும்.  ஒரு மூன்றாம் தரப்பு சேர்வர் கணினியிடம் உங்கள் தகவல்கள் சென்றடையாமல் தடுக்கும் பாதுகாப்பு முன்னேற்பாடாகவே  கூகுல் இதனை ஒரு விதியாகக் கடைபிடிக்கிறது.  இதன் மூலம் உங்கள் கணினிக்கும் ஸ்மாட் போனுக்குமிடையில் ஒரு பாதுகாப்பான இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

கூகலின் messages for web எனும்இந்தவசதியைப் பரீட்சித்துப் பார்க்கபின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.

1) முதலில்  Android Messages செயலியை உங்கள் ஸ்மாட் போனில் டவுன்லோட் செய்துநிறுவிக் கொள்ளுங்கள்.

2) அடுத்து Android Messages செயலியைத் திறந்துவலப்புறமேற்பகுதியில் காணப்படும் மூன்றுபுள்ளிகள் கொண்டமெனுபட்டனில் தட்டுங்கள்.



3) தோன்றும் மெனுவில்  “Messages For Web” என்பதைத் தெரிவுசெய்யுங்கள்.

4) அடுத்ததாகஉங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்தும்  Google Chrome, Firefox,  Safari,  Edge என எந்தவொரு இணைய உலாவியையும் திறந்து ” messages.android.com” எனும் முகவரியைவழங்குங்கள்.

5) அப்போது QR code உடனான ஒரு இணைய பக்கம் தோன்றும். நீங்கள் பயன் படுத்தும் கணினிஉங்கள் சொந்தபயன்பாட்டிற்கானதாக இருந்தால் QR code இன் கீழே கானப்படும்  “Remember this computer” என்பதை தெரிவு செய்து கொள்ளலாம். அப்படி இல்லாதபட்சத்தில் அதனை தெரிவுசெய்யாமல் இருப்பது பாதுகாப்பானது

6) அடுத்து உங்கள் ஸ்மாட் ஃபோனில் “Scan QR code”என்பதைத் தெரிவுசெய்யுங்கள்.


7) இப்போதுஉங்கள் ஸ்மாட் போனில் உள்ள QR code ஸ்கேனர் மூலம் கணினியின் இணையஉலாவியில் தோன்றும் QR code ஐ ஸ்கேன் செய்துகொள்ளுங்கள்.

8) QR code ஐ வெற்றிகரமாக ஸ்கேன் செய்யப்பட்டதும்  ” Connected to Messages for web ”எனும் செய்தியைக் காண்பிப்பதோடு உங்கள் ஸ்மாட் போனை கணினியியுடன்  இணைப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதோடு பிரவுசரில் Messages செயலியின் இடைமுகப்பைக்காண்பிக்கும்.