View in 3D / View in your Space features in Google Search

 



View in 3D / View in your Space features by Google மொபைல் சாதனங்களில் கூகுள் தேடல் முடிவுகளில் "View in 3D"  எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த   வசதியுடன் அதே முப்பரிமாண  உருவத்தை AR எனும் ஆக்மெண்டட் ரியாலிட்டி (Augmented Reality) தொழிட் நுட்பத்தைப் பயன் படுத்தி  நிஜ உலகத்தோடு இணைத்துப்  பார்க்க் கூடிய  ”View in your Space” ‘வியூ இன் யுவர் ஸ்பேஸ்”  எனும் அமசமும் அடங்குகிறது.

உண்மையில் இந்த வசதிகள்  கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் அறிமுகப்படுத்தியது கூகுல்.  அப்போது விலங்குகளின் மாதிரிகள் மட்டுமே இருந்தன. இப்போது, ​​மனித உடற்கூறியல் அமைப்புகளின் மாதிரிகள் மற்றும் செல் கட்டமைப்புகள் போன்ற ஏராளமான அறிிவியல் உள்ளடக்கங்களையும் காண முடிகிறது.

View in 3D / View in your Space features by Google

சில வ்ருடங்களுக்கு முன்னர் மொபைல் சாதனங்களில் பெரும் வரவேறபைப் பெற்ற போக்கமன் கோ “Pokémon GO” விளயாட்டு செயலியும் இதே AR தொழிநுட்பம் பயன் படுத்தியே உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த  முப்பரிமான அனுபவத்தைப் பெற நீங்கள் Android, அல்லது iOS சாதனத்தில் இணைய உலாவியை (சஃபாரி அல்லது குரோம்) திறந்து (உதாரணமாக) ஏதாவது ஒரு பிராணியைத் தேடுங்கள் . தேடல் முடிவு விண்டோவை கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்யும் போது  ”View in 3D" எனும் ஒரு தெரிவைக்  காண்பிக்கும். அந்த பட்டணில்  தட்டும் போது, ”View in your Space ‘உங்கள் இடத்தில் காண்க’ என்பதைக் கண்பீர்கள்.

இந்த வ்சதியைப் பெற உங்கள் தொலைபேசி AR தொழிநுட்பத்தை ஆதரிப்பதோடு Google Play Services for AR செயலியையும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் எனும் விடயங்களையும் மறந்து விடாதீர்கள். அப்டேட் செய்யப்படாமலிருந்தால் View in your Space தட்டும் போது சுயமாகவே அப்டேட் ஆகிவிடும்.

View in 3D மற்றும் View in your Space முழுமையான பட்டியலைக் காண