YouTube Shorts வந்தாச்சு யூடியூப் ஷார்ட்ஸ்

 






YouTube Shorts சமூக ஊடகங்களில்  டிக்டாக்  செயலி பெரும் அலையை ஏற்படுத்தியது. குறுகிய நேர வீடியோக்களின் மூலம்  இச் செயலி உலகளவில் முதலிடத்தில் தன்னை நிலை நிறுத்தி யுள்ளது. கூகுல் ப்லே ஸ்டோரில் டிக்டாக்அண்ட்ராயிட் செயலி ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிறுவல்களைப் பெற்றுள்ளது.  

டிக்டாக்கிற்குப் போட்டியாக வேறு சில சமூக ஊடக நிறுவங்களும் தமது மாற்று செயலியை அறிமுகப்படுத்தி வருகின்றன.  மற்ற நிறுவனங்களுடனான போட்டிகள்  மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலில் தடைகள் வந்தாலும்  (அமெரிக்காவிலும்  தடை செய்ய முயற்சிக்கப்பட்து)  டிக்டோக் இன்னும் தனது  கிரீடத்தைத் தக்க வைத்துக் கொள்டிருக்கிறது.

YouTube Shorts

கடந்த வருடம் பேஸ்புக் நிறுவனம் ரீல்ஸ் எனும் தனது குறுகிய நேர வீடியோ  உருவாக்கும் அம்சத்தை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தியது.

அதேபோல் கூகுல் நிறுவனமும்   யூடியூப் ஷார்ட்ஸ் எனும் பெயரில் குறுகிய நேர வீடியோ  உருவாக்கும் அம்சதத்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் முதன் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.  கடந்த வாரம்  அதன் பீட்டா பதிப்பை அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு வெளியிட்டுள்ளது யூடியூப்.

இந்தியாவில்  அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், டிக்டோக் சேவை இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்தது. இதன் விளைவாக இந்தியாவில் யூடியூப் ஷார்ட்ஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.  ஒவ்வொரு நாளும் 3.5 பில்லியன் பார்வைகளைப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

யூடியூப் ஷார்ட்ஸ்  பீட்டா பதிப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே கிடைப்பதால், இந்த அம்சம் உலகளவில் அனைவருக்கும் எப்போது கிடைக்கும் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை கூகுள் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

YouTube Shorts

YouTube ஷார்ட்ஸ்  குறும்படங்கள் என்பது  60 விநாடிகள் வரை  ஓடும் செங்குத்து வீடியோக்கள். ஷார்ட்ஸ்   வீடியோக்களை உங்கள் சேனலில் காண்பிப்பதோடு பார்வையாளர்களின் யூடியூப் தளத்தில் முகப்புப்பக்கத்திலும் காண்பிக்கும்.

YouTube இன் குறுகிய நேர வீடியோ உருவாக்கும் கருவியான, ஷார்ட்ஸ் கேமரா செயலி மூலமும் இந்த வீடியோக்களை உருவாக்கலாம்.  எனினும் இந்த செயலி மூலம்15 வினாடிகள் வரை நீளமான வீடியோக்களையே  உருவாக்க முடியும்.

வேறு வழிகளில் 60 வினாடிகள் வரையான  செங்குத்து விடியோக்களை உருவாக்கி அப்லோட் செய்ய  முடியும். எனினும் பதிவேற்றும் போது தலைப்பு (title) அல்லது விளக்கத்தில் (description)  #Shorts எனும் ஹேஷ்டேகை சேர்க்க வேண்டும்.

இருந்தாலும் பார்வையாளர்களால் விரைவாகவும் எளிதாகவும் ரசிக்கக்கூடிய 15 விநாடிகள் கொண்ட வீடியோக்களிலேயே கவனம் செலுத்துமாறு யூடியூப் பரிந்துரைக்கிறது.

YouTube Shorts