How to identify if a Website is Legit or Trying to Scam You?
- இணையதள முகவரி "https: //" என ஆரம்பிக்கின்றதா மற்றும் பூட்டு ஐக்கான் இருக்கின்றதா என Address bar இல் பாருங்கள். அவ்வாறிருந்தால் அது ஒரு மோசடி தளத்திற்கு எதிரான உத்தரவாதம் அல்ல. ஆனால் வலைத்தள உரிமையாளர் தரவுப் பரிமாற்றம் மற்றும் ஹேக்கர்களிடமிருந்து தளத்தைப் பாதுகாக்க பாதுகாப்பான குறியாக்க செயல்முறைகளைப் (SSL-Secure Socket Layer) பயன்படுத்துகிறார் என்பதைக் காட்டுகிறது. மோசடி தளங்கள் இது போன்ற பாதுகாப்பில் கவனம் செலுத்துவது அரிது. எனினும் Secured அடையாளம் இருந்தாலும் 100 வீதம் பாதுகாப்பானதல்ல.
- நிறுவனத்தைத் தொடர்புகொள்வதற்கான வழிகள் (Contact details) உள்ளனவா எனப் பாருங்கள். தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல், நிகழ் நேர அரட்டை அல்லது அமைவிட முகவரி, இல்லை என்றால் எச்சரிக்கையுடன் தொடருங்கள்.
- பெரும்பாலான சட்டபூர்வமான நிறுவனங்கள் சமூக ஊடக இருப்பு மற்றும் செயல்பாட்டைக் கொண்டுள்ளன. சந்தேகத்திற்குரிய வலைத்தளத்தில் சமூக ஊடக ஐகான்களைப் பார்த்தால், அவர்கள் உண்மையில் ஒரு சமூக ஊடக தளத்துடன் இணைந்திருக்கிறார்களா எனப் பாருங்கள்.
- மோசடி செய்பவர்கள் பிரபலமான நிறுவன டொமைன் பெயர்களை "ஒத்த" டொமேன் பெயரை (இணைய தளப் பெயர்) உருவாக்கியிருப்பார்கள். நீங்கள் சட்டபூர்வமற்ற வலைத்தளத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளீர்களா (Redirect) என்பதை அறிய address bar ஐ எப்போதும் இரண்டு முறை சரிபாருங்கள்.
- இணைய பக்கங்களில் உரைப் பகுதிகளில் இலக்கணப் பிழைகள் எழுத்துப்பிழைகள் இருக்கின்றனவா என்பதைக் கவனியுங்கள் ஒரு வலைத்தளத்தில் அவ்வப்போது எழுத்துப் பிழைகள் ஏற்படலாம், ஆனால் அதிகப்படியான பிழைகள் இருப்பின் அது ஒரு சட்டப்பூர்வ தளம் இல்லையென யூகிக்கலாம்.
- வலைத்தளங்கள் தங்கள் பார்வையாளர்களுக்கு அவர்களின் தரவு எவ்வாறு சேகரிக்கப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது, பாதுகாக்கப்படுகிறது மற்றும் சேமிக்கப்படுகிறது என்பதற்கான தனியுரிமைக் கொள்கைகள் (Privacy Policy) மற்றும் நடைமுறைகளை வழங்க வேண்டும். பெரும்பாலான தளங்கள் விரிவான தகவலை வழங்குகின்றன. உங்களைப் பற்றிய எந்தவொரு தகவலையும் அல்லது எந்த ஆன்லைன் கொள்வனவுகளையும் செய்வதற்கு முன் இந்தத் தகவலைப் படியுங்கள்.
- சில வலைத்தளங்களில் அவ்வப்போது பாப்-அப் (pop-up) விளம்பரங்கள் வரலாம். ஆனால் அதிகப்படியான விளம்பர உள்ளடக்கம் பிற வலைத்தளங்களுக்குத் திருப்பிவிடப்படும் இணைப்புகளைக் கிளிக் செய்ய உங்களைத் தூண்டுவதானது அது ஒரு மோசடி தளம் அல்லது பாதுகாப்பற்ற தளம் என அறியலாம்.
- கூகுலின் பாதுகாப்பான உலாவி வெளிப்படைத்தன்மை Google Safe Browsing Transparency Report அறிக்கையுடன் சந்தேகத்திற்குரிய தளத்தை சரிபாருங்கள். அத் தளத்தின் ஒரு URL ஐ வழங்கி அந்த இணையதளத்தின் நம்பகத்தன்மையை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
- சில ஆன்லைன் விற்பனையாளர்கள் பொருட்களை விற்பனை செய்ய அல்லது சேவையை ஊக்குவிக்க விலை தள்ளுபடியை வழங்குவது ஒரு பொதுவான நடைமுறை. இருந்தாலும், நம்பமுடியாத அளவு விலைக் கழிவு அறிவித்திருந்தால் அதனைத் தொடர்வதற்கு முன் இரண்டு முறை சிந்தியுங்கள்.
- வலைத்தளம் நீண்ட காலம் பயன் பாட்டில் உள்ளதா எனப் பாருங்கள். மோசடி மற்றும் போலி தளங்கள் பொதுவாக குறுகிய ஆயுட்காலம் கொண்டவையாக இருக்கும். Whois Lookup (https://whois.domaintools.com/) தளத்தில் சென்று டொமைன் பெயர் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எவ்வளவு காலம் இணையதளம் செயலில் உள்ளது போன்ற தகவல்களைப் பெற முடியும்.